பொது செய்தி

தமிழ்நாடு

சின்ன வெங்காயம் விலை கிடு

Added : மே 15, 2019
Share
Advertisement
 சின்ன வெங்காயம் விலை கிடு

உடுமலை:சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்து வருகிறது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஐந்து மாதத்திற்கு முன்பு, ஒரு கிலோ, 120 ரூபாய் வரை விலை இருந்ததால், அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது.ஆனால், அறுவடையின் போது, உள்ளூர் வரத்து மட்டுமன்றி, வெளி மாநில வரத்து காரணமாக, விலை வேகமாக சரிந்தது.இதனால், வெங்காயம் விலை குறைந்தது.
கடந்த மாதம், ஐந்து முதல் 10 ரூபாய் வரை மட்டுமே விற்றது. இதனால், விவசாயிகள் சின்ன வெங்காயம் அறுவடை செய்யாமல் வயல்களில் தேங்கியது. அறுவடை செய்த வெங்காயமும், ஒரு சில விவசாயிகள் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவழித்து, பட்டறை அமைத்து இருப்பு வைத்தனர்.இந்நிலையில், மழைப்பொழிவு குறைவு, வறட்சி காரணமாக, சின்ன வெங்காயம் சாகுபடி பரப்பு குறைந்ததோடு, வரத்தும் குறைந்து, சின்ன வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது.
தற்போது, கிலோ, 32 ரூபாய் வரை விற்பனையாகிறது.விவசாயிகள் கூறுகையில், 'சின்ன வெங்காயம் சாகுபடிக்கு, விதை முதல் அறுவடை வரை, ஏக்கருக்கு, 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு பிடிக்கிறது. வறட்சி, நோய்த்தாக்குதல் காரணமாக மகசூல் குறைந்துள்ளது.வழக்கமாக, ஏக்கருக்கு, ஏழு டன் வரை மகசூல் இருக்கும். தற்போது நான்கு முதல் ஐந்து டன் மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது. தற்போது, விலை உயர்ந்து வருவதால், ஓரளவு கட்டுபடியாகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X