பொது செய்தி

தமிழ்நாடு

மனிதநேய மையம்

Added : மே 15, 2019
Advertisement

சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, 'தொகுதி - 1 ஏ' உதவி வனக்காப்பாளர் பதவிக்கான தேர்வில், மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., இலவச கல்வியகம் மாணவர்கள், முதல் மூன்று இடங்களை பெற்று, சாதனை படைத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர், சைதை துரைசாமி, 'மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., இலவச கல்வியம்' நடத்தி வருகிறார்.இங்கு படித்த மாணவர்களில், 3,500 பேர், போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, பல்வேறு அரசு பணிகளில் உள்ளனர்.தமிழ்நாடு வனத்துறை பணிக்கான, 'தொகுதி - 1 ஏ' உதவி வனக்காப்பாளர் பதவியில், காலியாக உள்ள, 14 பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், 2017 டிச., 17ல் தேர்வு நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, 9ம் தேதி நேர்முகத் தேர்வு நடந்தது. இதில், 41 பேர் பங்கேற்றனர். இவர்களில், மனித நேய மையம் சார்பில் பங்கேற்ற மாணவர்களில், ஏழு பேர் வெற்றி பெற்றனர்.வேல்மணி நிர்மலா, சாந்தவர்மன் ஆகியோர், 666 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தில் முதலிடம் பெற்றனர். மணிகண்ட பிரபு, சீனிவாசன் ஆகியோர் முறையே, இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X