பொது செய்தி

தமிழ்நாடு

சிறந்த கல்விப்பணியில் செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லுாரி

Added : மே 15, 2019
Share
Advertisement

ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கூட்டாம்புளி கிராமத்தில் செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லுாரி 10 ஆண்டுகளாக சிறந்த கல்விப்பணி செய்து வருகிறது.
லாப நோக்கம் இல்லாமல், பல்கலை மற்றும் அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒழுக்கமே உயிர் மூச்சு, தரமான கல்வியே லட்சியம் என்ற உன்னத குறிக்கோளோடு இயங்கி வரும் கல்வி நிறுவனம். ஜாதி, மத பேதமின்றி மனித குலம் மேம்பாடு அடைய வழி காணப்படுகிறது. சீரழிவை நோக்கி செல்கின்ற சமுதாயத்தை தடுத்து நிறுத்தி சிந்திக்கின்ற சமுதாயமாக மாற்ற எல்லாவித முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன.என்னென்ன பாடங்கள் பல்கலையில் உள்ளனவோ அவற்றை எல்லாம் இந்தக்கல்லுாரியில் ஆரம்பித்து, இப்பகுதி ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன் பெற்று உலகத்தோடு போட்டி போடுகின்ற மேன் மக்களாக ஆக்குவதே கல்லுாரி நிர்வாகத்தின் லட்சியம். அழகப்பா பல்கலையில் இணைவு பெற்ற 51 கல்லுாரிகளில் இந்த கல்லுாரி மாணவர்கள் தரப்பட்டியலில் 26 இடத்தை பெற்றுள்ளனர்.போட்டிகளில் முதலிடம் பெறுவது மட்டும் அல்லாமல், மாநில அளவில் கருத்தரங்குகளில் பங்கேற்று பாராட்டுக்களையும், பட்டயங்களையும் பெற்றுள்ளனர். கல்லுாரி என்பது பட்டதாரிகளை உருவாக்குவது அல்ல. சாதனையாளர்களாக மாற்றுவது தான் எங்கள் நோக்கம். தாளாளர் குடும்பத்தில் உள்ள அனைவரும் கல்வியாளர்கள். சேவை மனப்பான்மை உடையவர்கள். கல்லுாரியின் மூலம் மூலதனம் ஈட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. அனைவரும் டாக்டர்கள். ஏழை, எளிய மக்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதன் மூலம் உன்னத சமுதாயத்தை அமைத்திட முடியும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.நகர்ப்புறத்தில் உள்ள காட்சி தொடர்பியல் துறை, தொழில் நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்புத்துறை போன்ற சுய வேலை வாய்ப்புள்ள பாடங்களை குறைந்த கட்டணத்தில் படிக்கலாம். விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக கல்வி வழங்குவதன் மூலம் மாநில அளவில் எல்லா விளையாட்டிலும் பதக்கம் பெற்று மிளிர்கிறார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X