தமிழ்நாடு

400 வீடுகளுக்கு ஒரு பேட்டரி வாகனம்...ஒதுக்கீடு!:திருவள்ளூரில் குப்பை அகற்ற ஏற்பாடு

Added : மே 15, 2019
Share
Advertisement
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், வீடு தோறும் சென்று குப்பை எடுத்து வர, 23 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, 11 வாகனங்கள் வந்துள்ளன. ஒரு வாகனத்திற்கு, 400 வீடுகளில் குப்பை எடுத்து வர ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக, நகராட்சி அதிகாரிகள் கூறினர்.திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 14 ஆயிரத்து, 596 வீடு, கடைகள் உள்ளன. இங்கு, தினமும், 22 டன் குப்பை
  400 வீடுகளுக்கு ஒரு பேட்டரி வாகனம்...ஒதுக்கீடு!:திருவள்ளூரில் குப்பை அகற்ற ஏற்பாடு

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், வீடு தோறும் சென்று குப்பை எடுத்து வர, 23 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, 11 வாகனங்கள் வந்துள்ளன. ஒரு வாகனத்திற்கு, 400 வீடுகளில் குப்பை எடுத்து வர ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக, நகராட்சி அதிகாரிகள் கூறினர்.

திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 14 ஆயிரத்து, 596 வீடு, கடைகள் உள்ளன. இங்கு, தினமும், 22 டன் குப்பை சேகரமாகிறது.சேகரமாகும் குப்பையை, ஒரு காம்பாக்டர் லாரி, இரண்டு டிப்பர் லாரி மற்றும் 97 தள்ளுவண்டிகளில் சேகரித்து வந்தனர். இதற்கான பணியில், நகராட்சி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் என, மொத்தம், 178 பேர் உள்ளனர்.

வீடு, கடைகளுக்கு, இவர்கள் நேரடியாகச் சென்று, குப்பையை வசூலிப்பதால், நகராட்சி பகுதியில், குப்பைத் தொட்டி எதுவும் அமைக்கப்படவில்லை.இந்த நிலையில், துப்புரவு ஊழியர்கள், எளிதாக குப்பையை எடுத்து வருவதற்கு வசதியாக, 23 பேட்டரி வாகனம் வாங்க, நகராட்சி முடிவு செய்தது. ஒரு வாகனத்தின் விலை, 1.80 லட்சம் ரூபாய். தற்போது, 11 வாகனங்கள் வந்துள்ளன.

ஒவ்வொரு வாகனத்திற்கும், ஓட்டுனர் மற்றும் உதவியாளர் என, இரண்டு பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒரு வாகனத்திற்கு, 400 வீடுகளில், குப்பை எடுத்து வர, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இதனால், துப்புரவு தொழிலாளர்கள் சிரமமில்லாமல், எளிதாக குப்பையை எடுத்து வர முடியும்; மேலும், காற்று மாசு ஏற்படாது.

இது குறித்து, நகராட்சி ஆணையர், பி.மாரிச்செல்வி கூறியதாவது:துாய்மை பாரத இயக்கம் சார்பில், 23 பேட்டரி வாகனம் வாங்க, 'ஆர்டர்' அளிக்கப்பட்டு, 11 வாகனங்கள் வந்துள்ளன. மீதமுள்ள, 12 வாகனங்கள், இம்மாத இறுதிக்குள் வந்துவிடும்.இந்த வாகனங்களால், சேகரிக்கப்படும் குப்பையை, மக்கும், மக்காதது என பிரிக்கப்பட்டு, 19 இடங்களில் உள்ள பசுமை உரக்குடிலில் வைத்து, உரமாக மாற்றப்படும்.

கடைகள், மார்க்கெட்டில் சேகரமாகும் குப்பையை, ஆறு டாடா ஏஸ் ஆட்டோ மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளில் ஏற்றி, நுங்கம்பாக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்ட மையத்திற்கு, எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு உரமாக மாற்றப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

59 டன் இயற்கை உரம் தயாரிப்பு

திருவள்ளூர் நகராட்சியில் சேகரமாகும் குப்பை, ஆறு மாதங்களாக, நுங்கம்பாக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்ட மையத்தில் உரமாக மாற்றப்பட்டு வருகிறது. இதுவரை, 59 டன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில், 24 டன், விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 1 டன் உரம், 1,000 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கே.கோவிந்தராஜ்

சுகாதார அலுவலர், திருவள்ளூர்.
குப்பை அகற்றவில்லையா

மொபைலில் அழைக்கலாம்திருவள்ளூர் நகராட்சியின், 27 வார்டுகளில், மூன்று சுகாதார அலுவலர்கள், குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குப்பையை, தங்கள் பகுதியில் அகற்றவில்லை என்றால், அவர்களது மொபைல் மற்றும் அலுவலக தொலைபேசியில் புகார் அளிக்கலாம்.வார்டு சுகாதார அலுவலர் எண்1 - 16 வரை 98416 2697717- 21 வரை 91761 9414622 - 27 வரை 99415 05469அலுவலக தொடர்பு எண்: 044 - 2766 0226

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X