பொது செய்தி

தமிழ்நாடு

கோடை உழவு அவசியம் வேளாண் துறை ஆலோசனை

Added : மே 15, 2019
Advertisement

திருவள்ளூர்:விவசாயிகள் கோடை உழவு செய்வதன் மூலம், களை செடிகள் மக்கி, உரமாக மாறும் என, வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கிஉள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர், ஜி.பாண்டியன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், சாகுபடி நிலங்களில் பயிர் அறுவடைக்கு பின், பெய்யும் கோடை மழையை அவசியம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு, கோடையில் உழவு செய்வது தான் சிறந்தது.கோடை உழவு செய்யும் போது, வெளிவரும் முட்டைகள், புழு, கூட்டுப்புழு ஆகியவற்றை பறவைகள் உணவாக உண்பதால், பூச்சிகளின் தாக்குதல் குறையும்.

மானாவாரி நிலங்களில், மண் மிகவும் கடினமாக இருக்கும். கோடையில் உழவு செய்வதால், மண்ணின் இறுக்கம் குறைந்து, தன்மைமாறுபடும். மண் துகள்களாக மாறுவதால், மண்ணின் காற்றோட்டம் அதிகரித்து, நுண்ணுயிர்களின் வளர்ச்சி மேம்படும்.கோடை உழவு செய்வதால், களை செடிகள் மற்றும் பயிர் கழிவுகள் அழிக்கப்பட்டு, மக்கி உரமாக மாறுகிறது. விவசாயிகள், கோடை உழவை பயன்படுத்தி, உரிய பலனை பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X