கும்மிடிப்பூண்டி, சிப்காட்டில் முதலுதவி மையம் இயங்குமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி, 'சிப்காட்டில்' முதலுதவி மையம் இயங்குமா?

Added : மே 15, 2019
 கும்மிடிப்பூண்டி, 'சிப்காட்டில்' முதலுதவி மையம் இயங்குமா?

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாக முதலுதவி மையத்தை, முறையாக இயக்க வேண்டும் என, தொழிலாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள, 220 தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

தொழிற்சாலை விபத்தில் சிக்க நேரிடும் தொழிலாளர்கள் நலன் கருதி, 1993ம் ஆண்டு சிப்காட் வளாகத்திற்குள் முதலுதவி மையம் திறக்கப்பட்டது.ஐந்து ஆண்டுகள் வரை மட்டுமே அந்த முதலுதவி மையம் செயல்பட்டது. பின் எந்தவித பராமரிப்புமின்றி, பல ஆண்டுகளாக பூட்டி கிடந்தது.

இதனால், விபத்தில் சிக்கும் தொழிலாளர்களுக்கு முதலுதவி அளிக்கக்கூட வழியின்றி, 50 கி.மீ., தொலைவில் உள்ள சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.தொடர் கோரிக்கைகளுக்கு பின், கடந்த ஆண்டு, ஜூன் மாதம், தனியார் மருத்துவமனை சார்பில், முதலுதவி மையம் திறக்கப்பட்டது.

ஒரு மாத காலம் மட்டுமே இயங்கிய நிலையில், அந்த முதலுதவி மையமும் மூடப்பட்டது. முதலுதவி மையத்தை முறையாக இயக்க, சிப்காட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X