மம்தா அராஜகம்:தேர்தல் ஆணையரிடம் மத்திய அமைச்சர்கள் புகார்

Updated : மே 15, 2019 | Added : மே 15, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
மம்தா அராஜகம்:தேர்தல் ஆணையரிடம் மத்திய அமைச்சர்கள் புகார்

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் நேற்று பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா பிரசாரத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட மம்தா அரசை கண்டித்து இன்று பா.ஜ.வினர் டில்லியில் தர்ணா செய்கின்றனர்.
லோக்சபா தேர்தலையொட்டி இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் மிக பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர். ஜாய்நகர் பகுதியில் நடைபெற்ற மற்றொரு பிரசார கூட்டத்தில் நேற்று மம்தா பானர்ஜியை அமித் ஷா கடுமையாக தாக்கி பேசினார்.


latest tamil newsஇன்று பா.ஜ.தர்ணாஇந்நிலையில், கோல்கட்டாவில் நேற்று மாலை நடைபெற்ற பா.ஜ பேரணியில் அமித் ஷா பங்கேற்றார். பின்னர் கோல்கட்டா பல்கலை.யை அமித்ஷா வாகனம் கடந்த போது சிலர் கல்வீசி தாக்கினர். இதையடுத்து பா.ஜ.வினருக்கும், திரிணாமுல் காங். கட்சியினரும் இடையில் மோதல் வெடித்தது. கட் அவுட்டுகள் அடித்து நாசப்படுத்தப்பட்டன. சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றதால் கோல்கட்டா நகரம் போர்க்களமானது. பலர் காயமடைந்தனர்.வன்முறைக்கு காரணமான திரிணாமுல் காங். அரசை கண்டித்து இன்று பா.ஜ.வினர் டில்லி ஜந்தர்மந்தரில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளனர்.


தேர்தல் ஆணையரை முற்றுகை


நேற்று மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி, ஜிநே்திர பிரசாத் தலைமையிலான குழுவினர் டில்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். திரிணாமுல் காங். கட்சியினர் வன்முறையை தூண்டி அமித்ஷா பேரணியை சீர்குலைக்க முயற்சித்ததாக புகார் தெரிவித்தனர்.


மம்தா ஆவேசம்


வன்முறை குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், கலவரத்திற்கு காரணம் பா.ஜ. தான். கலவரத்தை ஏற்படுத்துவதற்காகவே பீஹார் மாநிலத்தில் இருந்து குண்டர்களையும், ரவுடிகளையும் மேற்குவங்கத்திற்கு அழைத்து வந்துள்ளனர். திரிணாமுல் காங்.கட்சியினர் மீது புகாரும் இல்லை என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharatha Nesan - Chennai,இந்தியா
15-மே-201915:23:24 IST Report Abuse
Bharatha Nesan She is the enemy for India, supporting muslim infiltrators(illegal immigrants) from Bangladesh to India. Issuing voter Id, Adhar id, passports to them. That illegal Muslim immigrants spreaded now whole india, they are involving in many many crimes as a thief. If you ask, they will say from calcutta west Bengal. She is increasing Muslim population in India, she is enemy of Bharath Mathaji
Rate this:
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
15-மே-201912:55:07 IST Report Abuse
Ab Cd யப்பா தோல்வி உருதியாகி விட்டது
Rate this:
Cancel
15-மே-201912:04:19 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் காங்கிரஸ் கழுத்தை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி விட்டது. அதனால் மாநில கட்சிகள் குறுநில மன்னர்களாக உருவெடுத்து விட்டார்கள் , இங்கே திமுக உட்பட. இப்போது பிஜேபி இந்திய அளவில் வளர்ச்சி அடைவது இவர்களுக்கு ஆபத்தாக இருக்கிறது , ஜனநாயக முறையில் எதிர்கொள்ளமுடியாமல் இப்படி வன்முறையில் இறங்குகிறார்கள். இது கேரளா , மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் அதிகம் நடக்கிறது.
Rate this:
JIVAN - Cuddalore District,இந்தியா
15-மே-201915:51:03 IST Report Abuse
JIVANபோ போ போயிகிட்டே இரு...
Rate this:
15-மே-201917:59:23 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்நான் போய்க்கொண்டே தான் இருக்கிறேன். நீங்கள் சமாதிக்குள் இருந்து எழுதுகிறீர்களா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X