கர்தார்பூர் சாலைப்பணி: தயாராகிறது பாக்.,

Updated : மே 15, 2019 | Added : மே 15, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
கர்தார்பூர் சாலைப்பணி: தயாராகிறது பாக்.,

லாகூர்:'கர்தார்பூர் சாலைப்பணிகள் துவங்க புதிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்' என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் பாகிஸ்தானிலுள்ள கர்தார்பூரில் 18 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் நினைவாக இந்திய எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் 'தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. கர்தார்பூருக்கு சீக்கியர்கள் விசா இன்றி புனிதப்பயணம் மேற்கொள்ள சாலை அமைக்க இந்தியாவின் குருதாஸ்பூரையும் கர்தார்பூரையும் இணைக்க திட்டமிடப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் இருநாட்டு பகுதிகளிலும் அடிக்கல் நாட்டப்பட்டது.


latest tamil news


இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில் பிப்.14ல் ஜம்மு-- காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.இதைத் தொடர்ந்து இருநாட்டுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டதால் கர்தார்பூர் சாலைப்பணியில் தேக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தரப்பில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் தனி நாடு கோரும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அதிகம் இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது. இதனால் கடந்த ஏப்ரலில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் இந்தியாவில் அமைய உள்ள புதிய அரசுடன் கர்தார்பூர் சாலைத்திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் 'எக்ஸ்பிரஸ் டிரிப்யூன்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி: கர்தார்பூர் வழித்தடம் அமைப்பதில் பாகிஸ்தான் எந்த காலதாமதமும் செய்யவில்லை. இந்தியா தான் பிடிவாதம் பிடிக்கிறது. அங்கு பார்லிமென்ட் தேர்தல் முடிவடைந்தபின் புதிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
15-மே-201909:22:12 IST Report Abuse
சுந்தரம் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இன்னமும் இருக்கிறார்களா?
Rate this:
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
15-மே-201908:21:12 IST Report Abuse
ramanathan இது உத்தமர் மோடியின் சிறந்த நடவடிக்கை. மாற்று மதத்தினரை மதிக்கும் குணம். எம்மதம் தான் உயர்ந்தது என சொல்லாமல் அனைவரையும் அரவணைத்து செல்ல அவருக்கு கற்றுத் தந்திருக்கிறது இந்துமதமும் RSS என்கின்ற அமைப்பும். இந்த உத்தமர் நடந்து செல்லும் பாதையில் உள்ள மண்ணை கமல் போன்ற நடிகர்கள் நெற்றியில் வைத்துக் கொண்டால் செய்த பாவம் தொலையும்.
Rate this:
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
15-மே-201916:39:23 IST Report Abuse
DSM .S/o PLM இதெல்லாம் பெருந்தன்மையோ, மாற்றாரை மதிக்கும் மனப்பக்குவமோ இல்லை.. கோட்ஸே இந்து, அவன் தீவிரவாதி, அவன் சார்ந்து இருந்தது இந்து மதம்.. எனவே அது தீவிரவாத மதம்.. இப்படி சொல்லுங்கள்.. உடனே நீங்கள் உத்தமர், பகுத்தறிவாளர், மதச்சார்பற்றவர் என்று போற்ற படுவீர்கள்.. இவ்வளவு சொல்ல கஷ்டமாக இருந்தாலோரே வார்த்தை மோடி ஒயிகா என்று கூவுங்கள் நீங்கள் மைனாரிட்டி செல்லப்பிள்ளைகள், ஊடகங்கள், திராவிடர்கள் கம்யூனிஸ்டுகள் என்று நிறைய பேர் மத்தியில் நல்ல பெயர் வாங்கி விடலாம்....
Rate this:
Cancel
Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
15-மே-201907:59:36 IST Report Abuse
Chowkidar Modikumar கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. கர்தார்பூர் கோவில் இந்திய கட்டுப்பாட்டில் வரும்.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
15-மே-201916:10:21 IST Report Abuse
pradeesh parthasarathyஇந்த பில்டப் அருணாச்சல பிரதேசம் சென்று சீனாவை பார்த்து சொல்லுங்க ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X