சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் ஏசி வெடித்து 3 பேர் பலி

Updated : மே 15, 2019 | Added : மே 15, 2019 | கருத்துகள் (6)
Advertisement
ஏ.சி., மின்கசிவு, தீவிபத்து, பலி

திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஏசி வெடித்ததில், தீப்பிடித்து தந்தை, தாய், மகன் உயிரிழந்தனர்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், காவேரிபாக்கம் சுப்புராயபிள்ளை வீதியை சேர்ந்தவர் ராஜூ(60). லேத் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி கலைச்செல்வி(55). இவர்களுக்கு கோவர்த்தனன்(30), கவுதமன்(26) என்ற இரு மகன்கள் உள்ளனர். கோவர்த்தனன், அதிமுக நகர மாணவர் அணி தலைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகியுள்ளது. கவுதமன், கார் டிராவல்ஸ் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.





நேற்று( மே14) இரவு வீட்டில் ஏசி இல்லாத அறையில் கோவர்த்தனன் , மனைவி காயத்ரி தூங்கி கொண்டிருந்தனர். ஏசி இருந்த அறையில் ராஜூ, கலைச்செல்வி, கவுதமன் ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஏசி வெடித்து தீப்பிடித்தது . இதில் தூங்கி கொண்டிருந்த 3 பேர் மீதும் தீ பரவியது. இதில், வீட்டை விட்டு அலறியபடியே வந்து ராஜூ வாசலில் உயிரிழந்தார். மகன் கவுதமன் ஹாலில் தீயில் கருகி உயிரிழந்தார். அறையிலேயே கலைச்செல்வி தீயில் கருதி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ஏசி வாங்கி 6 வருடங்கள் ஆகின்றன. இதில் ஒரு முறைதான் சர்வீஸ் செய்துள்ளனர். மற்றபடி சர்வீஸ் செய்யவில்லை. இதனால், விபத்து ஏற்பட்டிருக்கலாம், சதி செயல் காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை எனக் கூறியுள்ளனர்.




Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pavul Raj - Izatnagar,இந்தியா
20-மே-201902:38:29 IST Report Abuse
Pavul Raj ஸ்ப்ளிட் ஏசி வெடிக்க வாய்ப்பே இல்லை. இது கொலையாக இருக்க வாய்ப்பு அதிகம். சரியான விசாரணை முக்கியம். ஸ்ப்ளிட் ஏசி சர்விஸ் செய்யவில்லை அதனால் வெடித்தது என்பதெல்லாம் சுத்த பொய்...
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-மே-201905:28:40 IST Report Abuse
J.V. Iyer அவர் மகன், மருமகள் பெட்ரோல் வெடிகுண்டு வைத்து கொன்று இருப்பதாக செய்தி அல்லவா?
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
18-மே-201921:05:19 IST Report Abuse
Rangiem N Annamalai கொலை என உறுதி செய்து உள்ளனர் .பாராட்டுக்கள் காவல் துறைக்கு .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X