அமித்ஷா என்ன கடவுளா? மம்தா கேள்வி

Updated : மே 15, 2019 | Added : மே 15, 2019 | கருத்துகள் (73)
Share
Advertisement
அமித்ஷா, மம்தா, மம்தா பானர்ஜி, பா.ஜ., பாஜ, திரிணமுல்

கோல்கட்டா: தனக்கு எதிராக யாரும் போராடக்கூடாது என நினைக்கும் பா.ஜ.,தலைவர் அமித்ஷா என்ன கடவுளா என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.


latest tamil news




மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் பா.ஜ., தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணி நடந்தது. இதில், பா.ஜ., மற்றும் திரிணமுல் தொண்டர்கள் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், அங்கு பாரம்பரியமிக்க ஐஸ்வர் சந்திர வித்யாசாகர் கல்லூரி மீதும் கடுமையாக தாக்கப்பட்டது. இந்த கல்லூரியை முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கோல்கட்டா போலீஸ் கமிஷனர் நேரில் பார்வையிட்டனர்.


latest tamil news




பின்னர் மம்தா கூறியதாவது: தன்னை பற்றி அமித்ஷா என்ன நினைத்து கொண்டுள்ளார்? அவர், அனைத்திற்கும் மேலானவரா? தனக்கு எதிராக போராடக்கூடாது என நினைக்கும் அளவுக்கு கடவுளா? அவர்கள் கலாசாரம் இல்லாதவர்கள், வித்யாசாகர் சிலையை சேதப்படுத்தியுள்ளனர் அவர்கள் வெளியாட்கள். கோல்கட்டா பல்கலையின் பாரம்பரியம் குறித்து அமித்ஷாவுக்கு தெரியுமா? இங்கு படித்த புகழ்பற்ற நபர்கள் பற்றி தெரிந்து கொண்டுள்ளாரா? இந்த தாக்குதலுக்கு அமித்ஷா வெட்கப்பட வேண்டும். வடக்கு கோல்கட்டாவில் உள்ள பிதன் சாரணி பகுதியில், பிரதமர் மோடி, அமித்ஷாவின் கட் அவுட்களை பார்த்தேன். ஏராளமான பணத்தை செலவு செய்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
18-மே-201905:52:58 IST Report Abuse
meenakshisundaram மம்தா முப்பது நாட்கள்லேயும் அந்த 'மாதிரியே 'இருக்கிறாரே?என்ன ஒரு அதிசயம்?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-மே-201918:07:23 IST Report Abuse
J.V. Iyer மம்தா, அப்படியே பெண் கட்டுமரம்.
Rate this:
Cancel
oce - tokyo,ஜப்பான்
16-மே-201909:42:58 IST Report Abuse
oce பிரியங்கா சர்மா பாஜகவின் ஒரு கல் தூண். இந்த தைரியம் எவருக்கும் வராது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X