எந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் பதில்

Updated : மே 15, 2019 | Added : மே 15, 2019 | கருத்துகள் (237)
Share
Advertisement
கமல், பிரதமர் மோடி, ஹிந்து,

புதுடில்லி: எந்த ஒரு ஹிந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


கமல் கருத்தால் சர்ச்சை


இந்து தீவிரவாதம் என்பது இல்லவே இல்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்து பற்றி மோடியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசும் போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் எனக்கூறினார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அரவக்குறிச்சியில் கமலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news
பிரதமர் பதில்


இந்நிலையில், கமலின் கருத்து தொடர்பாக 'நியூஸ் எக்ஸ்' டிவிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி: எந்த ஒரு ஹிந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. அப்படி இருந்தால், அந்த நபர் ஹிந்துவாக இருக்க முடியாது. ஹிந்து எனக்கூறும் நபர் தீவிரவாதி கிடையாது. எந்த ஒரு தீவிரவாதியும் ஹிந்து என உரிமை கோர முடியாது. உலகமே ஒரு குடும்பம் என்பது ஹிந்து மதத்தின் ஆழமான நம்பிக்கை. அதில், மக்களை கொல்லவோ, துன்புறுத்தவோ ஹிந்துக்களுக்கு அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (237)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
00000 - 00000,இந்தியா
21-மே-201911:11:16 IST Report Abuse
00000 தனிப்பட்ட வாழ்க்கையில் உயர்வான நெறிகளைக் கடைப்பிடித்தது மற்றும் சுதந்திரத்திற்கு பாடுபட்டதைப் பொறுத்தவரை காந்தி நல்லவரே. ஆனால் அவருடைய ஒரு செயல் (தேசபிரிவினையில் காட்டிய பாரபட்சம்) இந்தியாவிலிருந்து பிரிந்த பகுதியில் வாழ்ந்த இந்துமக்களின் துயரத்திற்கு வழிவகுத்து விட்டது. அது என்ன பாரபட்சம் என்றால் பிரிவினை நிகழும்போது அந்தமக்கள் வாழ்வு பாதிக்கப்படும் என்று முறையீடுகள் வந்த நிலையில் பிரிவினையை அனுமதித்ததுதான். 2.கோட்சே என்ற தனிமனிதரைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அவர் நோக்கம் பிரிவினையை தடுத்து மக்கள் உயிர்ப்பலியை தடுப்பது. அந்த நோக்கம் நிறைவேறாததால் காந்தியை சுட்டுக் கொன்ற குற்றத்தை புரிந்த கொலையாளி அவர். நோக்கம் சரி ஆனால் செயல் தவறு. யாருமே முழுவதும் நல்லவரோ அல்லது கெட்டவரோ அல்ல. எல்லா மனிதர்களுமே அப்படித்தான், இந்த காளாமுகன் உள்பட.
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
20-மே-201923:37:12 IST Report Abuse
N.K வீரமணியும், சுபவீரபாண்டியனும், லியோனி போன்றோர் ஆண்டுதோறும் பட்டிமன்றம் நடத்தி எந்த தலைப்பு கொடுத்தாலும் இந்து கடவுள்களையும் வழிமுறைகளும் கேவலமாக விமர்சிக்கும் மூன்றாம்தர, நான்காம்தர பேச்சாளர்களும் உயிருடனும், சுதந்திரமாகவும், வளமோடும் நடமாடுவதே இந்துக்களில் தீவிரவாதிகள் இல்லை என்பதற்கு சான்று.
Rate this:
Cancel
00000 - 00000,இந்தியா
20-மே-201921:26:34 IST Report Abuse
00000 அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள பொருத்தம்தான் வாக்குவாதங்களுக்கும் நாட்டு நிகழ்வுகளுக்கும். காந்தியைப் பொருத்தவரை அவருக்கு சுதந்திரப் போராட்டத்தலைவர்கள், வீரர்கள், மற்றும் மக்களிடம் இருந்த செல்வாக்கு, அபிமானத்தைக் கொண்டு போராட்டத்தை சிறந்த முறையில் தலைமை ஏற்று நடத்தினார் என்றால் காரணம் அவர்சொல்லுக்கு எதிர்ச்சொல் இல்லாததால்(விதிவிலக்கு நேதாஜி). தெய்வ வாக்கை மதிப்பது போல் மக்கள் காந்தி சொல்லை கேட்டதற்கு காரணம் எளிமை, தேசபக்தி, அமைதி வழிகள், மக்கள் இந்துமதத்தில் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கை மற்றும் வெளிப்படையாக இருந்த காந்தியின் இராம பக்தி. இந்த அளவு ஒரு கட்டுக்கோப்பு காந்தியின் தலைமைக்கு அமைந்திருக்க இல்லை எனில் அவருடைய சத்தியாகிரகம் வென்றிருக்காது. அதனால்தான் நேதாஜி வெளியேற்றப்பட்டார். மற்றும் பகத்சிங்கை காக்க யாரும் முனையவில்லை. காந்தியைத் தவிர வேறொருவர் தலைமை வகித்திருந்தால் இந்தளவு வெற்றிகண்டிருக்க முடியாது என்ற அதேநேரத்தில் அவருடைய சில அஹிம்சை போராட்டங்களில் பொதுமக்கள் ஆங்கிலேய கொடுமையால் பலியானதை சுட்டிக்காட்டி பெரிய சர்ச்சை நடைபெறாததாலேயே அவர் இறுதிவரை தலைமை வகிக்க முடிந்தது. சுதந்திரப் போராட்ட வேகம் குறையக் கூடாது என்பதால் அனைவரும் காந்தியை குறை காணாது மௌனம் காத்தனர். இந்த ஒருங்கிணப்பு பிரிவினை என வந்தவுடன் தலைகீழாக மாறிவிட்டது பிரிவினைக்குட்பட்ட பாக் மற்றும் மேற்கு, கிழக்கு பாக் எல்லையையொட்டிய இந்தியப்பகுதிகளில் ஆங்கில ஆட்சியை எதிர்த்து சத்தியாகிரகத்தில் தியாகம்செய்த இந்தபகுதி மக்கள் பிரிவினைக்கும் தியாகம் செய்யவேண்டும் என்று காந்தி எதிர்பார்த்தது நிறைவேறவில்லை. முன்பு எதிர்த்தது ஆங்கிலேய ஆதிக்கத்தை இப்போதோ சொந்தமண்ணை வேறாகப் பிரிந்தவர் எடுத்துக் கொள்வதிலும் இந்தியாவைப் போலன்றி மதவாத நாடாக தங்கள் மண் மாறுவதையும் விரும்பாததால் தங்கள உயிர் மற்றும் உடைமைக்கான பாதுகாப்பு உறுதியாகும்வரை அவர்கள் பிரிவினையை ஏற்கவுமில்லை. எதிர்க்கவுமில்லை. ஆனால் இவர்கள் ஏற்காதவரையில் தங்களுடன் இருந்தால் நிலைமை சிக்கலாகிவிடும் என்றுணர்ந்த ஜின்னா தரப்பு இவர்களை பாதுகாக்க முனையவில்லை.சுதந்திரம் வந்தவுடன் இவர்கள் தேசத்துரோகிகளாக (பாகிஸ்தானுக்கு) உருவகம் செய்யப்பட்டு இரவோடிரவாக மானபங்கப்படுத்தப்பட்டு, படுகொலைக்காளாக்கப்பட்டு உயிர் காக்க ஆயிரக்கணக்கில் அனாதைகளாக இந்தியாவை நோக்கி விரட்டப்பட்டனர். இன்று இந்தியாவில் வசிக்கும் அவர்களின் சந்ததி இதற்கு சாட்சி ஏனெனில் அவர்களின் உறவினர் மாண்டது பற்றி அவர்கள்தான் அறிவார். காந்தியின் சத்தியாகிரகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து பட்டஅவஸ்தைகளோடு இதுவும் சேர்ந்ததுதான் மிச்சம்(அந்த கொடுங்கோலர்கள் ஒரு நாளும் சுதந்திரத்திற்கு பாடுபட்டிருக்க வாய்ப்பில்லை. இந்தியாவிடமிருந்து போகவே பாடுபட்டிருப்பார்கள்).சுதந்திரத்தை கொண்டாட முடியாத நிலையில் அன்று இருந்தவர்கள்தான் இதைச் சொல்லமுடியும். ஆமாம், இறந்த உறவினர்களுக்காக கண்ணீர்விட்டுக் கொண்டா இதைக் கொண்டாட முடியும்? இயற்கை உற்பாதம் மற்றும் பஞ்சம் காரணமாக மடிவது வேறு. மனிதரால் கொத்துகொத்தாக மாய்க்கப்படுவது வேறு. இரண்டாவதே தீவிரவாதம். இது சுதந்திர இந்தியாவின் உள்ளும்,வெளியிலும் அன்று நடந்தது. பெரும்பான்மை இந்துக்களாகவும் சிறுஎண்ணிக்கை மாற்றுமதமும் கொண்டிருந்தது என்பது உறுதி. பாக் அகதிகளே அதிக எண்ணிக்கை என்றால் நிச்சயம் அந்த மதத்தவர் சொற்ப எண்ணிக்கைதான் இருந்திருக்கும். மீண்டும் காந்தி பற்றிய தகவலுக்கு செல்வோம். சுதந்திர இந்தியா முழுதும் தேசத்தந்தையாக கொண்டாடும் நிலையில் ஒருபுறம் தங்கள் அன்பு சொந்தங்களை தொலைத்த சோகத்திற்கு உள்ளத்தில் பாதியைக் கொடுத்துள்ள அவர்கள் மறுபாதியை தேசபக்திக்கும் நிர்பந்தத்தினால் தேசத்தந்தைக்கும் ஒதுக்கினார்கள். இல்லையெனில் இந்தியாவிலும் இவர்கள் இருக்கமுடியாது. இதுதான் தேசபிதா என்ற நாணயத்தின் மறுபக்கம். முதல்பக்கத்தை யாரும் எதிர்க்கமுடியாது எனும்போது மறுபக்கத்தை எதிர்க்கலாமா? மறுபக்கத்தை ஏற்றுக்கொள்ள முதல்பக்கத்தையும் ஏற்கவேண்டும். அதுதான் தராசுமுனை. இப்போது இந்த மறுபக்கம் வெளிச்சமானதே கோட்சேயின் பங்குக்கு பின்புதான். அதற்கு முன் அது லட்சியம் செய்யப்படவில்லை. கோட்சே சுட்டது கொலை, பாவம் மற்றும் அதர்மம். ஆனால் கோட்சே என்ற நபர் வந்திராவிடில் பின்னனிப் பாதகங்கள் என்றுமே மறைவிலிருக்கும் நேதாஜியின் மறைவில் உள்ள மர்மம்போல. கோட்சே செய்தது கொடுஞ்செயலாதலால் அதை விசாரணை செய்யும்போது மறுபக்கம் பார்க்க தேவை ஏற்பட்டது. அதைக் கொண்டு தூக்குதண்டனையை மாற்ற அவசியம் ஏற்படவில்லை என்றாலும் இந்திய தண்டனைச் சட்டத்தில் குற்றவாளியின் வாக்குமூலம் முழுமையாகப் பெறப்பட்டு ஆய்ந்தபின்தான் தண்டனை வழங்கலாம். தீவிரவாதி என்றால் சாட்சியங்கள் போதும் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில். தேசபிதா,அண்ணல் என்று ஒருவர்கொண்டாடப்படுவது மக்கள் அபிமானத்தைப் பெற்றதால்.அப்படிக் கொண்டாடப்படும் மனிதரை வணங்கியவன் எப்படி மகானாக ஆவதில்லையோ ( அப்படி இருக்குமெனில்,அவரை வணங்கிய கோட்சே சுட்டிருக்க மாட்டான்) அதேபோல் சுட்டவனும் தீவிரவாதி ஆகமுடியாது. அவன் கொலைக்குற்றம் புரிந்தவன் மற. கடுந்தண்டனைக்கு உரியவன். தீவிரவாதி என்று சொல்வது தவறில்லை. ஆனால் அழுத்தம் கொடுப்பது தவறு. தீவிரவாதி தேசத்தை அழிக்க முனைபவன். அதற்கெனவே கொலைகளை செய்வதை தொழிலாக கொண்டவன். தனிப்பட்ட மனிதரைக் கொல்வதற்காக யாரும் தீவிரவாதியாக முடியாது. சமூகம் அல்லது நாட்டை அச்சுறுத்துபவர்களே தீவிரவாதிகள். கோட்சேயின் செயலால் தேசம் அதிர்ச்சியடைந்தது மகாத்மாவிடம் வைத்திருந்த நேசத்தால் அது தேசப்பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் எனக் கொண்டால் நம்மை பலஹீனப்படுத்திக் கொண்டதாக ஆகும். மனிதர்களைக் கொன்று குவிக்கும் தீவிரவாதத்தை பலமுறை கண்கூடாக பார்த்தவர்கள் இதை தீவிரவாதத்தோடு ஒப்பிட்டால் தீவரவாதம் என்ற அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடபவர்களாவார். காந்தியைக் கொன்றதற்கான கோட்சேயின் காரணங்கள் நிராகரிக்கப்பட்டது , கொலைக்கு எந்த நியாயமும் கற்பிக்கமுடியாதென்பதால் தான். அவர் கூறிய முன் நிகழ்வுகள் பொய்யானது எனச் சாட்சி உறுதி செய்ததால் அல்ல. அதற்கு அவசியம் ஏற்படவில்லை. அவர் மடிந்தவர்கள் மற்றும் துரத்தப்பட்டவர் எண்ணிக்கையை கூறி பொதுவாகக் குறிப்பிட்டதால் அவர்கள் அடையாளப்படுத்தப் படாதவரை அது உறுதியாகாது. உள்ளத்தில் உறுதியாக உள்ளது நேரில் இருந்தால் மட்டும்தான் சட்டப்படி செல்லும். அதற்காக சம்பந்தப்பட்ட படுகொலைசெய்யப்பட்டவர்களோ அல்லது அனாதையாய் ஒடிவந்தவர்கள் சாட்சிக்கு வந்தால் அவர்கள் கோட்சே ஆதரவாளர்கள், தேசத்துரோகிகள் என்று பாவிக்கப்படுவார்கள். ஏற்கனவே உள்ள சோகத்தோடு அதையும் கட்டிஅழ முடியுமா? ஆகவே அதற்கு துணவு வர ஒருவருக்கும் நியாயமில்லை அதனால் பாதகமில்லை.ஆனால் இந்த செய்திகளைக் காட்டாதே என்று காலத்துக்கு திரைபோடமுடியுமா? அன்றிலிருந்து இன்று வரை பிரிந்த நாடு செய்துகொண்டுவரும் காரியங்கள் மேற்கூறிய மறுபக்கசெய்திகள் உண்மையாகத்தான் நடந்திருக்கவேண்டும் என்று கருதுவது அறியாமையா? உலகில் வேறெந்த நாடும் (அடக்கி ஆண்ட ஆங்கிலேயர் உட்பட) நம்மீது காட்டாத துவேஷம், வன்மம் ஆகியவற்றை இதுமட்டும் காட்டும் காரணம் பிரிவினையின்போது கிடைத்த வெகுமதி என்று நம் சகோதர சகோதரிகளை அவர்களுக்காக பலியிட்டு அதை அலட்சியப்படுத்தினோமோ அப்போதே நாம் அவர்களுக்கு இளப்பமானதால்தான் உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடான நம்மிடம் துள்ளும் துணிச்சல். இந்திய ராணுவத்தின் மகத்தான வலிமையை அறிந்துள்ளதால் இந்தஅளவோடு உள்ளது. இல்லையென்றால் ஒவ்வொரு மாநிலமும் ஒரு புல்வாமாவைப் பார்த்திருக்கும். இந்தச் செயலை இந்தியா வேறொரு நாட்டில் செய்தால் என்னபெயர் வருமோ அந்தப்பெயரில் அப்படிச் செய்யாதபோதே அண்டைநாட்டில் விமர்சிக்கப்படுகிறது. இந்த காளாமுகனை காக்கைகூட பின்தொடராது. எனவே யாருக்காகவும், எதற்காகவும் இதை எழுதும் அவசியம் இல்லை. அந்த அனாதைகளுக்காக மட்டும். அவர்கள் மட்டும் இதைப் போற்றட்டும் மானசீகமாக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X