பொது செய்தி

இந்தியா

ஜூன் 6ல் துவங்கும் பருவமழை

Updated : மே 15, 2019 | Added : மே 15, 2019 | கருத்துகள் (5)
Advertisement
கேரளா, பருவமழை,  இந்திய வானிலை மையம்

புதுடில்லி: கேரளாவில், தென் மேற்கு பருவமழை , இந்த ஆண்டு 5 நாள் தாமதமாக ஜூன் 6 ல் தான் துவங்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. வழக்கமாக பருவமழை ஜூன் 1 ம் தேதி கேரளாவில் துவங்கும்.

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டு கேரளாவில், பருவமழை தாமதமாக துவங்கும். கேரளாவில் தென்மேற்கு பருவமழை, ஜூன் 6ம் தேதிக்கு மேல் தான் துவங்கும். இதில் 4 நாட்கள் முன் பின் இருக்கலாம்.
அந்தமான் நிகோபார் தென் பகுதி, நிக்கோபார் தீவு மற்றும் வங்கக்கடல் தென் கிழக்கு பகுதியில் மே 18 - 19 தேதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை மையமும், கேரளாவில் பருவமழை ஜூன் 4 ம் தேதி துவங்கும் என கூறியிருந்தது.


லேசான மழைக்கு வாய்ப்பு


இதனிடையே, சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
15-மே-201917:11:56 IST Report Abuse
S.Baliah Seer மனிதன் செய்யும் பாவங்களை இப்போது இயற்கையும் செய்ய துவங்கி விட்டது போலும். தமிழ் நாட்டில் ஆங்காங்கே சிறிது மழை பெய்தாலும் சென்னையை ஏன் வாட்டி எடுக்கிறாய்.ஊழல் செய்தவர்களெல்லாம் சென்னையில் ஒன்று கூடிவிட்டதாலா? வைகாசி பிறந்தாலே கோடையிடி மழை என்பார்களே.பொய்த்து விட்டாயே
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
15-மே-201914:48:34 IST Report Abuse
raghavan சென்னையில் வானத்துல மேகம் இருக்கும் வெயில் கொளுத்தும் மழை இருக்காது. வானிலை மையம் ஆரம்பிச்சதிலிருந்து சொல்ற அதே அறிக்கைதான்.
Rate this:
Share this comment
Cancel
Hm Join - Chennai,இந்தியா
15-மே-201914:27:30 IST Report Abuse
Hm Join முடியல சென்னைல நாக்கு தள்ளுது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X