அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமலை வெளுத்து வாங்கும் பா.ஜ., தலைவர்கள்

Updated : மே 15, 2019 | Added : மே 15, 2019 | கருத்துகள் (70)
Advertisement

சென்னை : ஹிந்துக்கள் குறித்து கமலின் சர்ச்சை பேச்சுக்கு தமிழக பா.ஜ., தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் கமலுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.






கமலின் சர்ச்சை பேச்சு குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, கமல் தான் பேசியது தவறு என முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கமலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், சில அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து வருவது வேதனை அளிக்கிறது. காந்தியின் கொள்ளுப் பேரன் என தன்னை சொல்லிக் கொள்ளும் கமல், மத வேறுபாட்டை உருவாக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். நாட்டை விட்டு வெளியேற போவதாக மிரட்டியவர் தான் இந்த கமல். தான் அரசியல்வாதி என்பதில் கூட நம்பிக்கை இல்லாதவர் அவர். அவர் தனது கருத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றார்.






கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா, கமல் ஆன்டி இந்தியன் அல்ல. ஆன்டி மனிதகுலம். ஹிந்துக்களுக்கு எதிராக பேசியதற்காக கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்டாவிட்டால் வைரமுத்துவுக்கு எழுந்ததை விட கடுமையான எதிர்ப்பு எழும்பும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajit Kumar vanniyan - Chennai,இந்தியா
29-மே-201916:18:00 IST Report Abuse
Ajit Kumar vanniyan இதுவே வேறு மதத்தில் எவனாவது செய்தால் மட்டும் ஏன் அந்த மத்தை குறை சொல்கிறார்கள், மதத்தை வைத்து அரசியல் செய்பவன் முதலில் மக்களிடம் நேர்மையானவாக, அவன் தனி வாழ்க்கையில் நல்லவனாக, கடவுளின் மேல் பயம் உள்ளவனாக இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Ajit Kumar vanniyan - Chennai,இந்தியா
29-மே-201916:15:46 IST Report Abuse
Ajit Kumar vanniyan நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கோட்ஸே எந்த மதத்தை சேர்ந்தவர் என்று தான் அப்பறம் அவர் சொன்னது சரியா இல்லையா என்று சிந்திப்போம்.
Rate this:
Share this comment
Cancel
truth tofday - india,இந்தியா
18-மே-201908:56:27 IST Report Abuse
truth tofday இங்கு முஸ்லீம் அல்லது Christians எல்லாம் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இல்லை எல்லாம் ஹிந்துக்கள் இவர்கள் எல்லாம் ஏன் மதம் மாறினர்கள் பணத்திற்கு மட்டும் தான சிந்திக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X