பொது செய்தி

இந்தியா

ராகுல், லாலுவுக்கு சொத்து வந்தது எப்படி?: மோடி

Updated : மே 15, 2019 | Added : மே 15, 2019 | கருத்துகள் (32)
Advertisement

பளிகஞ்ச்: காங்கிரசின் எஜமானர் குடும்பத்திற்கும், பீகாரில் உள்ள ஊழல் குடும்பத்திற்கும் ஆயிரக்கணக்கான கோடிகளில் சொத்து எங்கிருந்து வந்தது என பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.



பீகாரின் பளிகஞ்ச் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, காங்.,கின் எஜமானர் குடும்பம் மற்றும் பீகாரின் ஊழல் குடும்பத்திற்கும் தற்போது ஆயிரம் கோடிகளில் சொத்து உள்ளது. இந்த பணம் எங்கிருந்து வந்தது? இவர்கள் நாட்டை பற்றியும், ஏழைகளை பற்றியும் சிறிதாவது அக்கறை காட்டியதுண்டா? அவர்களின் கவனம் முழுவதும் ஊழல் செய்வதில் தான் உள்ளது.
மிக உயரத்தில் வசிக்கும் அவர்களால் ஏழைகளின் வலியை காண முடியாது. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை இழந்தவர்களை பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. இப்போது கூட எப்படி கொள்ளையடிக்கலாம் என்று தான் அவர்கள் கண்களை திறந்து வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 2022 ல் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு ஆக்குவோம் என நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். அவர்களை சோலார் மின்சாரம் வழங்குபவர்களாக மாற்றவும் முடிவு செய்துள்ளோம்.



விவசாய பண்ணைகள் உணவு உற்பத்தி செய்வதற்காக மட்டுமின்றி சூரிய ஒளி மின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படும். இதற்கான பணிகளை எங்கள் அரசு ஏற்கனவே துவக்கி விட்டது. பீகாரில் இது எனது கடைசி பிரசார பொதுக் கூட்டம். 2019 தேர்தலில் உங்களின் ஆசிகளை பெற எனக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு இது. நீங்கள் என்னை ஏற்றுக் கொண்டு மீண்டும் பிரதமர் பதவி கொடுத்த பிறகு அதிக அளவிலான வளர்ச்சி திட்டங்களுடன் திரும்பி வருவேன் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-மே-201903:58:58 IST Report Abuse
J.V. Iyer நல்ல கேள்வி கேட்டீர்கள். இவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்? சொத்துக்களை எப்போது மீட்பீர்கள்? அப்படியே 2G கொள்ளையர்களை உடனே கவனியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
sahayadhas - chennai,இந்தியா
16-மே-201900:02:30 IST Report Abuse
sahayadhas இந்தியாவிற்கு அடையாளம் தந்ததே நேரு குடும்பம் பேச வந்துடானுங்க. வெட்கமில்லாம.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
15-மே-201920:54:08 IST Report Abuse
Ramakrishnan Natesan ஐந்து வருடத்தில் உம்ம சொத்து இரு மடங்கு ஆனது எப்படி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X