நாகரிகச் சாதனைகளை இடைவிடாமல் உருவாக்க வேண்டும்: ஷிச்சின்பிங்| Dinamalar

நாகரிகச் சாதனைகளை இடைவிடாமல் உருவாக்க வேண்டும்: ஷிச்சின்பிங்

Added : மே 15, 2019
Share
நாகரிகச் சாதனைகளை இடைவிடாமல் உருவாக்க வேண்டும்: ஷிச்சின்பிங்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இன்று புதன் கிழமை ஆசிய நாகரிகங்களுக்கு இடையிலான உரையாடல் மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் அப்போது அவர் பேசியதாவது:-

உலகம் மற்றும் ஆசிய நாகரிகங்களில் ஒன்றாக சீன நாகரிகமும் திகழ்கிறது. பண்டைக்காலம் தொட்டு, தொடர்ந்து வளர்ந்து வரும் சீன நாகரிகம். சீனத் தேசிய எழுச்சியை வெளிக் கொண்டு வருகின்றது என்று சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் கூறினார். மேலும் அவர் கூறும் போது, "கால வளர்ச்சிக்கேற்ப, நாகரிகம் தொடர்ச்சியாக வளர்ந்து வருகின்றது. அதன் வளர்ச்சிப் போக்கில் நிலைத்தன்மையும், ஈர்ப்பும் வாய்ந்த நாகரிகச் சாதனைகளை இடைவிடாமல் உருவாக்க வேண்டும்" என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார். "பல்வேறு நாடுகளுடன் ஆசியச் சுற்றுலா பரவல் திட்டத்தை நடைமுறைப்படுத்தச் சீனா விரும்புகின்றது. ஆசிய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, ஆசிய நாடுகளின் மக்களுக்கிடையிலான நட்புறவை அதிகரிப்பதற்கு பங்காற்ற வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

"உலகின் பல்வேறு நாடுகள், தேசிய இனங்கள், பண்பாடுகள் பரிமாற்றம் மேற்கொண்டு, ஒன்றிடமிருந்து மற்றொன்று கற்றுக்கொண்டு, ஆசிய பொது சமூகம், மனிதக் குலத்தின் பொது சமூகம் முதலியவற்றுக்குரிய பண்பாட்டு அடிப்படையை வலுப்படுத்த வேண்டும். பன்முகத் தன்மையின் வழி, நாகரிகத்தைப் பரிமாறிகொண்டு, அதன் மூலம் நாகரிக வளர்ச்சி அடையலாம்" என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X