சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Updated : மே 16, 2019 | Added : மே 15, 2019
Advertisement
 'டவுட்' தனபாலு

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்: பா.ஜ., ஆட்சிக்கு வரும்; அப்போது, ஐந்து அமைச்சர் பதவி பெறலாம் என, தி.மு.க., துாது விட்டுள்ளது.

டவுட் தனபாலு: உண்மையிலேயே, நீங்க, தி.மு.க.,வைத் தான் விமர்சிக்குறீங்களா... இல்லை, மத்தியில் எங்களுக்கு, ஐந்து அமைச்சர் பதவியையாவது தரணும்னு, அழுத்தம் கொடுக்குறீங்களா... கூட்டணிக்கு முன்னரே, 'மத்தியில், 10 அமைச்சர் பொறுப்புகளைப் பெறுவோம்'னு, ராஜேந்திர பாலாஜி சொல்லி இருந்தாரே... அதனால் தான் இந்த, 'டவுட்!'

பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி: காங்., தோற்றுவிடும் என்ற பயத்தில், பதவிக்காக மூன்றாம் அணிக்கு செல்ல, ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

டவுட் தனபாலு: எல்லாக் கூட்டணியும், நெருக்கமும், பதவிக்காகத் தானே... உங்களுக்கே இது தெரியலைன்னா, வேறு யாருக்குங்க தெரியும்... கொள்கை மற்றும் 10 அம்ச கோரிக்கைக்காக மட்டும் தான் நீங்க, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இருக்கீங்களா... இல்லை, பதவி ஏதும் கொடுத்தால் வாங்க மாட்டீங்களா என்ற, 'டவுட்' வருதே...!

வி.சி., தலைவர், திருமாவளவன்: தி.மு.க., வுடன் நான் கூட்டணி வைப்பது, ராமதாசுக்கு மிகப்பெரிய அச்சத்தைத் தருகிறது. எங்களைப் பிரித்துவிட்டால், தி.மு.க.,வை எளிதாகக் கையாள முடியும் என, அவர் நம்புகிறார். அதன் தொடர்ச்சியாகவே, என் மீது அவர், அபாண்டமான பழிகளை சுமத்துகிறார்.

டவுட் தனபாலு: உங்கள் மீது வன்முறை குற்றச்சாட்டுகளை, பா.ம.க., வைத்தால், அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், தி.மு.க.,வின் பாதுகாப்பை ஏன் தேடுறீங்க... ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் வரிந்துகட்டி வக்காலத்துக்கு வரணும்னு எதிர்பார்க்குறீங்களா... இதை, நேரடியாகக் கேட்டால் என்ன கெட்டிடும்கறது தான், மக்களின், 'டவுட்!'

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X