சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலைக்கு சென்ற கணவர் மாயம்

Added : மே 15, 2019
Advertisement

புட்லுார்: புட்லுார் கிராமத்தில், வேலைக்கு சென்ற கணவரை காணவில்லை என, அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.செவ்வாப்பேட்டை அடுத்த, புட்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் சீனிவாசன், 39, சென்னையில், கூலி வேலை செய்து வரும் இவர், 4ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.செவ்வாப்பேட்டை போலீசில், இவரது மனைவி குமுதா கொடுத்த புகாரின் படி, செவ்வாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

மணல் கடத்தியவன் கைது
செவ்வாப்பேட்டை: அரண்வாயல்குப்பம் அருகே, கூவம் ஆற்றில், மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, செவ்வாப்பேட்டை போலீசார், நேற்று முன்தினம் இரவு, சோதனை மேற்கொண்டனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் மணல் மூட்டையை கடத்தி வந்த நபர், போலீசாரைக் கண்டதும், வாகனத்தை நிறுத்திவிட்டு, தப்ப முயன்றான்.இதையடுத்து, போலீசார் ஹீரோ ஹோண்டா ஸ்பிளன்டர் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அதை ஓட்டி வந்த அரண்வாயல்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கர்ணன், 31, என்பவனை கைது செய்தனர்.

இளம்பெண் மாயம்
செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை அடுத்த, தொழுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகதாஸ் மகள் அஞ்சு, 23. இரண்டு ஆண்டுகளாக, காக்களூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவர், 13ம் தேதி காலை, வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக சென்றவர், வீடு திரும்பவில்லை.இதையடுத்து உறவினர்கள் மற்றும நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, செவ்வாப்பேட்டை போலீசில், இவரது தாய் ஞானம்மாள் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X