தமிழ்நாடு

திருவள்ளூரில் இருந்து தேனிக்கு ஓட்டு இயந்திரம் அனுப்பி வைப்பு

Added : மே 15, 2019
Share
Advertisement

திருவள்ளூர்: தேனி லோக்சபா தொகுதிக்கான மறு ஓட்டுப்பதிவுக்கு, திருவள்ளூரில் இருந்து, 30 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 20 வி.வி.பேட் ஆகியவை, நேற்று, வேன் மூலம், போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள, 38 லோக்சபா தொகுதி மற்றும், 18 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், கடந்த மாதம், 18ம் தேதி நடந்தது.இந்நிலையில், தேனி லோக்சபா தொகுதியில், இரண்டு ஓட்டுச்சாவடிகளில், மறுஓட்டுப்பதிவு நடத்துவதற்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கான, தேர்தல், வரும், 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, திருவள்ளூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் வைக்கப்பட்டிருந்த, 54 ஆயிரம் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், 30 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 20 வி.வி.பேட் நேற்று கொண்டு செல்வதற்கு, போலீஸ் பாதுகாப்புடன், வருவாய் துறை அலுவலர்கள் வந்தனர்.

தேனி லோக்சபா தொகுதிக்கு ஓட்டு இயந்திரங்கள் கொண்டு செல்வதற்காக, தனியார் வேன் ஒன்றும் பிற கட்சியினருக்கு தெரியாமல் கொண்டு வரப்பட்டது.தகவல் அறிந்ததும், காங்கிரஸ்., தி.மு.க., உட்பட பிற கட்சி நிர்வாகிகள், பத்துக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து, ஓட்டு இயந்திரங்கள் ஏற்றும் போது, இரு ஓட்டுச்சாவடிகளுக்கு எதற்கு இத்தனை ஓட்டுபதிவு இயந்திரம், வி.வி.பேட் என, எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், சிறிது நேரம் அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X