'ஸ்ட்ரீட் சைல்ட்' உலக கோப்பை தென்னிந்தியா சாம்பியன்

Added : மே 15, 2019
Advertisement
 'ஸ்ட்ரீட் சைல்ட்' உலக கோப்பை தென்னிந்தியா சாம்பியன்

சென்னை: இங்கிலாந்தில் நடந்த, 'ஸ்ட்ரீட் சைல்ட்' உலகக் கோப்பை போட்டியில், இந்தியா வெற்றி பெற்று உள்ளது.

உலக தெருவோரக் குழந்தைகளின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக, இங்கிலாந்தில், ஏப்., 30 முதல் மே, 7ம் தேதி வரை, தெருவோரக் குழந்தைகளுக்கான, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.இதில், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்க தேசம், நேபாளம், தான்சானியா, மொரீஷியஸ், காங்கோ, வட இந்தியா, தென்னிந்தியா ஆகிய நாடுகளில் வசிக்கும், தெருவோரக் குழந்தைகள் பங்கேற்றனர்.

இதில், இரண்டு பிரதியாளர்கள் உட்பட, ஆறு வீரர்கள் பங்கேற்றனர்.ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆண், பெண் என, இருபாலரும் பங்கேற்றனர். ஐந்து ஓவர்கள், நான்கு பந்துகள் வீதம் போடப்பட்டது.இந்தியாவின் மும்பை யில் இருந்து, தலா, இரண்டு ஆண்கள் மற்றும் பெண்களை அங்குள்ள தொண்டு நிறுவனம் ஒன்றும், தென்னிந்திய போட்டிக்கு, தலா, இரண்டு ஆண்கள் மற்றும் பெண்களை, கருணாலயா என்ற தொண்டு நிறுவனமும் அழைத்துச் சென்றது.அதில், அரை இறுதியில், வங்கதேசத்தையும், இறுதிப் போட்டியில் இங்கிலாந்தையும் வீழ்த்தி, தெருவோரக் குழந்தைகளுக்கான உலகக் கோப்பையை, தென்னிந்திய அணி வெற்றி பெற்றது.

அணியின் கேப்டன் பால்ராஜ், சூர்யபிரகாஷ், நாகலட்சுமி மற்றும் மோனிஷா ஆகியோர், இங்கிலாந்தில் நடைபெற்ற தெருவோரக் குழந்தைகளுக்கான கருத்தரங்கில் பங்கேற்று, அவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X