பொது செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கி சுடும் பயிற்சி நாளை துவக்கம்

Added : மே 15, 2019
Advertisement

சென்னை: சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் உள்ள, துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில், நாளை முதல், கோடைக் கால பயிற்சி முகாம் துவங்குகிறது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்படுகிறது. இங்கு, கோடைக் கால பயிற்சி முகாம், இரண்டு கட்டங்களாக நடக்கிறது. மே 1 முதல், 15ம் தேதி வரை, முதல் கட்ட பயிற்சி முகாம் நிறைவடைந்தது.இந்நிலையில், நாளை முதல், 31 வரை, இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நடக்க உள்ளது. இதில், 10 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். பயிற்சி கட்டணமாக, 1,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.விபரங்களுக்கு, 74017 09469 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X