பொது செய்தி

தமிழ்நாடு

முக்கிய பணியிடங்கள் காலி

Added : மே 15, 2019
Advertisement

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் முக்கிய அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.நெல்லிக்குப்பம் நகராட்சியில், ஒரு துப்புரவு அலுவலர் மற்றும் இரண்டு துப்புரவு ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் பிறப்பு இறப்பு சான்றுகள் வழங்க கால தாமதமாகிறது.நகராட்சி பகுதியில் நடைபெறும் துப்புரவு பணிகளை பார்வையிட அதிகாரிகள் இல்லாததால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி, நோய் பரவும் அபாயம் உள்ளது. பணி மேற்பார்வையாளர் வாசு கூடுதலாக துப்புரவு அலுவலர் பணியையும் செய்கிறார்.இதனால் அவர் வெளியில் பணிகள் நடக்கும் இடத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால், பணிகள் தரமாக நடக்கவில்லை. கட்டட ஆய்வாளர் பணியிடமும் காலியாக உள்ளது. பண்ருட்டி நகராட்சியில் பணிபுரியும் கட்டட ஆய்வாளரே நெல்லிக்குப்பத்தையும் கூடுதலாக கவனிக்கிறார்.குறிப்பிட்ட நேரத்தில் கட்டட அனுமதி பெற முடியாததால் அனுமதி பெறாமலேயே கட்டடங்களை பொதுமக்கள் கட்டுகின்றனர். இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மக்கள் நலன்கருதி உடனடியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X