பொது செய்தி

தமிழ்நாடு

அறிவிக்கப்படாத மின்வெட்டு

Added : மே 15, 2019
Advertisement

கம்மாபுரம்: கம்மாபுரம் பகுதியில், கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக இரவில் துாங்க முடியாமல் பொது மக்கள் அவதியடைகின்றனர்.மாவட்டம் முழுவதும் கோடையில் கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கம்மாபுரம் பகுதியில் எவ்வித முன் அறிவிப்பின்றி கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் 45 நிமிடம் முதல் 1:30 மணி நேரம் வரை மின் தடை ஏற்படுகிறது.மின்வெட்டால் இரவில் துாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மின்வெட்டு நள்ளிரவு 12:00 முதல் 1:00 மணி வரை ஏற்படுத்துவதால், மக்கள் துாக்கத்தை தொலைப்பதோடு மட்டுமின்றி, திருடர்கள் அச்சத்திலும் தவிக்கின்றனர். இப்பகுதியில் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மின் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் மின் மோட்டார் மூலம் விவசாயிகள் பாசனம் செய்கின்றனர். கோடை காலம் என்பதால் அனைத்து வீடுகளிலும் மின்விசிறி இயக்குவதால், மின் தேவை அதிகரித்து, அடிக்கடி டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைகிறது. இதனால் மின் தடை ஏற்படுகிறது. உடனுக்குடன் சீரமைத்து மின்வினியோகம் செய்கிறோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X