பொது செய்தி

தமிழ்நாடு

பெ.பூவனுாருக்கு கூடுதல் பஸ்: கிராம மக்கள் கோரிக்கை

Added : மே 15, 2019
Advertisement

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் இருந்து அரியராவி வழியாக பெ.பூவனுாருக்கு கூடுதல் அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த பெ.பூவனுார், ஓ.கீரனுார், அரியராவி உள்ளிட்ட கிராமங்களில் 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமங்களுக்கு காலை 7:40 மணிக்கு தடம் எண் - 5; மாலை 4:40 மணிக்கு தடம் எண் - 14 ஆகிய அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதன் மூலம் கிராம மக்கள் பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் மற்ற நேரங்களில் பஸ் வசதி இல்லாததால், 6 கிலோ மீட்டர் துாரமுள்ள பெண்ணாடம் சுமைதாங்கி பஸ் நிறுத்தம் வந்து பஸ் ஏறி வெளியூர் செல்ல வேண்டும்.இதனால் முதியோர், பெண்கள், மாணவ, மாணவிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே, பெண்ணாடத்தில் இருந்து அரியராவி வழியாக பெ.பூவனுாருக்கு கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X