பொது செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி இறந்தவர் அடையாளம் தெரிந்தது

Added : மே 15, 2019
Advertisement

வேப்பூர்: வேப்பூரில் வாகனம் மோதி சாலையில் வாகனம் மோதி இறந்தவரின் அடையாளம் தெரிய வந்தது.திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் சிவமடம் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சாலையில் நடுவே விழுந்து கிடந்தார். தொடர்ந்து வந்த வாகனங்கள் நிற்காமல் அவர் மீது மோதியதால், உடல் நசுங்கி அதே இடத்தில் இறந்தார்.இது குறித்து போலீசார் விசாரித்ததில், சம்பவ இடத்தில் கிடைத்த சிம்கார்டு மூலமாக தொடர்பு கொண்டு விசாரித்த போது, விருத்தாசலம் அடுத்த எடசித்துாரைச் சேர்ந்த ஆனந்த், 30, என்பது தெரிய வந்தது. வேப்பூர் அடுத்த சேப்பாக்கத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்த நிலையில், கடந்த 12ம் தேதி இரவு ஐ.பி.எல்., கிரிக்கெட் பார்த்து விட்டு சேப்பாக்கத்திலிருந்து வேப்பூருக்கு நடந்து சென்ற போது விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X