பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் திருக்கல்யாணம் கோலாகலம்

Added : மே 15, 2019
Advertisement
 கோவில்களில் திருக்கல்யாணம் கோலாகலம்

திரளான பக்தர்கள் பங்கேற்பு
உடுமலை:உடுமலை போடிபட்டி உச்சிமாகாளியம்மன், அமராவதிநகர் அமராவதி அம்மன் கோவில்களில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
.உடுமலை, அமராவதி நகர் அமராவதி அம்மன் கோவிலில், திருவிழா, கடந்த மாதம் 30 ம்தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.நேற்றுமுன்தினம் இரவு, 7:00 மணிக்கு சக்தி கும்பம் மற்றும் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, மாலை, 5:00 மணிக்கு அபிேஷகம் மற்றும் விசேஷ பூஜை நடந்தது.திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், 5:00 மணிக்கு பக்தர்கள் திரளாக பூவோடு எடுத்து வழிபட்டனர். இன்று, மஞ்சள் நீராடுதல் மற்றும் சப்பரம் திருவீதி உலா நடக்கிறது. நாளை, மறுபூஜை நடக்கிறது.உடுமலை போடிபட்டி உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா, கடந்த 7 ம் தேதி மாலையில் நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் மாலையில், அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, போடிபட்டி, தண்டாயுதபாணி கோவிலிலிருந்து பக்தர்கள் சீர் கொண்டுவருதல் நிகழ்ச்சி நடந்தது.இரவு, 8:00 மணிக்கு போடிபட்டிபுதுார் நாகம்மாள் கோவிலிலிருந்து, சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.காலை, 7:00 மணிக்கு பக்தர்கள், வேண்டுதல்களை நிறைவேற்ற முளைப்பாரி எடுத்து வந்தனர். மாவிளக்கு மற்றும் பொங்கல் படைத்து வழிபட்டனர். மாலை, 3:00 மணிக்கு பக்தர்கள் பூவோடு எடுத்தனர்.இன்று மஞ்சள் நீராடுதல் மற்றும் நாளை, மகாபிேஷகம், அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சிறப்பு பூஜையும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X