பொது செய்தி

தமிழ்நாடு

கொளஞ்சியப்பர் கல்லுாரியில் சிறப்பு கலந்தாய்வு துவங்கியது

Added : மே 15, 2019
Advertisement

விருத்தாச்சலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் முதல் கட்ட சிறப்பு கலந்தாய்வை முதல்வர் வேலு துவக்கி வைத்தார்.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் இளநிலை பட்ட படிப்புக்கான முதற்கட்ட சிறப்பு கலந்தாய்வு முதல்வர் வேலு தலைமையில் நேற்று துவங்கியது. இதில், விளையாட்டு வீரர்கள், என்.சி.சி., மாணவர்கள் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள் பங்கேற்றனர்.வரலாற்றுத்துறை தலைவர் மதிவாணன், பேராசிரியர்கள் முகுந்தகுமாரி, சுரேஷ்குமார், உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார் உள்ளிட்ட கலந்தாய்வு கமிட்டியினர் பங்கேற்றனர்.இன்று மற்றும் நாளை பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் படிப்புக்கான கலந்தாய்வு நடக்கிறது.வரும் 20 ம் தேதி பி.காம்., பி.பி.ஏ.,; 21ம் தேதி பி.ஏ., ஆங்கிலம், 22ம் தேதி பி.ஏ., தமிழ், 24 மற்றும் 27 ம் தேதிகளில் பி.ஏ., வரலாறு மற்றும் பொருளியல் பாடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.கலந்தாய்வு காலை 10:00 மணிக்கு துவங்கும் என முதல்வர் வேலு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X