பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார்-முதுநகர் தேசிய நெடுஞ்சாலை தரமில்லாமல் போடுவதாக கண்டனம்

Added : மே 15, 2019
Advertisement

கடலுார்: கடலுார்-முதுநகர் சாலை தரமற்ற நிலையில் போடுவதாக பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.கடலுார் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் வெண்புறாக்குமார் தலைமை தாங்கினார். குருராமலிங்கம், சுப்புராயன், ரவி முன்னிலை வகித்தனர். பழனி வரவேற்றார்.சட்ட ஆலோசகர் திருமார்பன், வழக்கறிஞர் தாஸ், மீனவர் பேரவை மாநில செயலர் கெஜேந்திரன், சமூக நீதி பாசறை சாய்ராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு; கடலுார் நகரின் தேசிய நெடுஞ்சாலையில் மோகினி பாலம் முதல் முதுநகர் இரட்டை ரோடு வரை சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்கள் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.மோசமான பணிகள் தரமற்றும் குடிநீர் குழாய்களை உள்ளடக்கி கால்வாய்களை கட்டுவது, சாலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றாமல் அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்வது.இதனை கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டிப்பதுடன், தரமான முறையில் பணி நடைபெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X