பொது செய்தி

தமிழ்நாடு

கணியூர் கால்நடை மருந்தகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

Added : மே 15, 2019
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, கணியூரில் அமைந்துள்ள கால்நடை மருந்தகத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மடத்துக்குளம் தாலுகா கணியூர் மாரியம்மன் கோவில் அருகே, கால்நடை மருந்தகம் உள்ளது. இங்கு, கணியூர் பேரூராட்சிக்குட்பட்ட கணியூர், ராமப்பட்டணம் பகுதியிலிருந்து விவசாயிகள் தங்களது கால்நடைகளை சிகிச்சைக்கு அழைத்து வருகின்றனர்.தினமும் 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் அழைத்து வரப்படுகின்றன. சொந்தக்கட்டடத்தில் இயங்கும் இந்த மருந்தகத்துக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால், பலவித சிரமம் ஏற்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: மருந்தகத்துக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், அருகிலுள்ள முட்புதர்களில் வசிக்கும் விஷப்பூச்சிகள், மருந்தக வளாகத்தில் உலா வருகின்றன. இதனால், கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இங்கு வரும் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைகின்றனர்.அப்பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதோடு, மருந்தக வளாகப்பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர். இது, அருவருப்பையும், சுகாதாரகேட்டையும் ஏற்படுத்துகிறது.இதனால், அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள், மன உளைச்சல் அடைகின்றனர். எனவே, கால்நடை மருந்தகத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க, கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X