பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை

Added : மே 15, 2019
Advertisement
 அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை

தரவரிசை பட்டியல் வெளியீடு
உடுமலை:உடுமலை அரசு கலைக்கல்லுாரி இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான, தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.
உடுமலை, அரசு கலைக்கல்லுாரியில் இளநிலை முதலாமாண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடக்கிறது. கடந்த மாதத்தில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு, மே மாதம் 6ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்டவை பெறப்பட்டன.முதலாமாண்டில் உள்ள, 814 இடங்களுக்கு, 1,800 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில், தரவரிசைப்பட்டியல் தயார் செய்யப்பட்டு, நேற்று, கல்லுாரி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.கல்லுாரி தகவல் பலகையிலும் மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் ஒட்டப்பட்டது. மாணவர்களுக்கான சேர்க்கை இடத்தை அறிந்துகொள்ள மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.தரவரிசைப்பட்டியல் படி, வரும் 20ம் தேதி முதல், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆரம்பமாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X