பொது செய்தி

தமிழ்நாடு

பொன்பத்தி திரவுபதியம்மன் கோவிலில் தேர் திருவிழா

Added : மே 15, 2019
Advertisement

செஞ்சி: பொன்பத்தி திரவுபதியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.செஞ்சி அடுத்த பொன்பத்தி திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த விழா மற்றும் செம்பாத்தம்மன், பச்சையம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தினமும் பூங்கரகம் ஊர்வலம் மற்றும் மகாபாரத சொற்பொழிவு நடந்து வந்தது. 8ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் செம்பாத்தம்மன், அர்சுனன், திரவுபதியம்மன், கிருஷ்ணர் என மூன்று தனித்தனி தேர்களின் பவனி ஒரே நேரத்தில் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X