பொது செய்தி

தமிழ்நாடு

தொடர்ந்து கொட்டப்படும் கட்டட கழிவு கூவத்தை புனரமைத்தும் பயன் இல்லை

Added : மே 15, 2019
Advertisement

புனரமைக்கப்பட்ட கூவம் கரைப்பகுதியை ஆக்கிரமித்து, கட்டட கழிவுகள், தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன.

பொதுப்பணி, சுற்றுச்சூழல், சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து, சென்னையில், கூவத்தை புனரமைக்க திட்டமிடப்பட்டது.இதற்கு முதற்கட்டமாக, கூவத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், குடிசைகள் அகற்றப்பட்டன. அங்கு வசித்தவர்கள், கண்ணகி நகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மீட்கப்பட்ட பகுதிகளில், கூவத்தின் இரண்டு புற கரைகளுக்கும், இரும்பு கம்பியால், வேலி அமைக்கும் பணிகள், படிப்படியாக நடந்து வருகின்றன.இந்த இரும்பு கம்பியின் உள்பகுதியில், கரையின் இரண்டு புறங்களிலும், நடைபாதைகளும் அமைக்கப்படுகின்றன.

எழும்பூரில், பின்னி சாலையில் இருந்து, கூவம் கரையை ஒட்டி, ஒரு, கி.மீ.,க்கு, இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சாலையில், தமிழ்நாடு மின் வாரியத்தின் பின்புற நுழைவாயில், காயிதே மில்லத் மணிமண்டபம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.இங்கு, ஏராளமான பழைய வாகனங்களை பழுதுபார்க்கும் கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இச்சாலையில், கூவத்திற்கு புதிதாக அமைக்கப்பட்ட முள் கம்பி வேலியை ஒட்டி, கட்டட இடிபாடுகள், மலைபோல் குவிக்கப்பட்டு வருகின்றன.கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் தனியார் மட்டுமின்றி, மாநகராட்சி குப்பை லாரிகளும், இதற்கு உடந்தையாக இருப்பதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சென்னையில், அடையாளம் தெரியாத வாகனங்களை, ஒரே இடத்தில் நிறுத்தக்கூடாது என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது.இருப்பினும், கூவம் கரையை ஆக்கிரமித்து, ஏராளமான வாகனங்கள், இந்த சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன.கூவம் கரைக்கு வெளியே, கட்டட இடிபாடுகள் கொட்டப்படுவதால், அதனை புனரமைத்தும் பலன் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.இனியாவது, அங்கு குப்பைகள், கட்டட இடிபாடுகள் கொட்டுவதை தடுக்க, பொதுப்பணித்துறை மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X