பொது செய்தி

தமிழ்நாடு

கண்ணகி நகர் நிலையத்திற்கு புதிய கட்டடம்; இம்மாத இறுதியில் திறக்க காவல் துறை ஏற்பாடு

Added : மே 15, 2019
Advertisement

கண்ணகி நகர்: ஒரு கோடி ரூபாயில் கட்டப்பட்ட, கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கான புதிய கட்டடத்தை, இந்த மாத இறுதியில் திறக்க, காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கண்ணகிநகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, 2002ல், துவக்கப்பட்டது. தற்போது, 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த பகுதி, துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லையில் இருந்தது. மக்கள் தொகையை கணக்கிட்டு, 2011ல், கண்ணகி நகர் காவல் நிலையம் துவங்கப்பட்டது.தற்போது, குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு ஒதுக்கிய, ஒரு சமூக நலக்கூடத்தில், காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. சொந்த கட்டடம் கட்ட, அதே பகுதியில், 90 சென்ட் இடம், குடிசை மாற்று வாரியம் ஒதுக்கியது.அதில், 1 கோடி ரூபாயில், காவல் நிலையம் கட்டும் பணி, 2018 பிப்ரவரி மாதம் துவங்கியது. மொத்தம், 5,834 சதுர அடி பரப்பில், மூன்றடுக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மழையின்போது, தண்ணீர் தேங்கும் பகுதியானதால், தரைத்தளம் வாகன நிறுத்தமாக கட்டப்பட்டுள்ளது.ோ சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் வரும் காலத்தில் அமைய உள்ள, மகளிர் காவல் நிலையத்திற்கான கட்டமைப்புடன், கட்டடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தற்போது, 98 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த மாத இறுதியில், காவல் நிலைய புதிய கட்டடத்தை திறக்க, காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X