பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் நகரில் நெரிசலைத் தவிர்க்க காந்தி சிலை இடமாற்றம் செய்யப்படுமா?

Added : மே 15, 2019
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, சாலையில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் நான்கு முனை சிக்னலில் இருந்து நேருஜி சாலை, கிழக்கு பாண்டி ரோடு வரை 7 மீட்டர் சாலை இருந்தது. இச்சாலை வழியாக புதுச்சேரி, கடலுார், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்நிலையில், நேருஜி சாலை மற்றும் திரு.வி.க., வீதி இணையும் பகுதியில் காந்தி சிலை உள்ளது. இந்த சிலையால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும், சாலை விரிவாக்கப் பணிக்கும் காந்தி சிலை இடையூறாக உள்ளது. இதனால், போக்குவரத்திற்கு இடையூறின்றி காந்தி சிலையை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி சுற்றுசுவர் அருகே இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, அனைத்து கட்சி கூட்டம் நடத்தி, காந்தி சிலையை இடமாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X