பொது செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

Added : மே 15, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் கிராமத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.அங்கன்வாடி மையத்தில் நடந்த விழாவிற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட மாவட்ட திட்ட இயக்குனர் மரகதம் தலைமை தாங்கினார். வட்டார திட்ட அலுவலர் செல்வி முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் 27 கர்ப்பிணி பெண்களுக்கு கண்ணாடி வளையல் அணிவித்து, சீர் வரிசை வழங்கி வளைகாப்பு விழாவை திட்ட இயக்குனர் மரகதம் நடத்தி வைத்து பேசுகையில், 'கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தி, கண்ணாடி வளையல் அணிவிப்பதன் காரணம், கருவில் உள்ள குழந்தைகள் அதன் ஒலியோசையை கேட்டு மூளை வளர்ச்சி பெறுவதற்காகத்தான்.மேலும் கர்ப்பிணி பெண்கள் நல்ல சத்துணவு சாப்பிட வேண்டும். லேசான உடற் பயிற்சியுடன் மிகுந்த ஓய்வும் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் கருவில் உள்ள குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியமும் கூடும். எனவே வளைகாப்பு விழா என்பது ஆரோக்கியம் சார்ந்த நிகழ்ச்சியாகும்' என்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பிரேம் இணை ஒருங்கிணைப்பாளர் கோட்டீஸ்வரன், வட்டார ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், இணை ஒருங்கிணைப்பாளர் கபில்தேவ், மேற்பார்வையாளர்கள் ஜோதி, பாத்திமா, மாடூர் மைய பணியாளர்கள் ஜானகி, செல்வக்குமார், வி.ஏ.ஓ., உமாபாரதி, உதவியாளர் பெரியம்மாள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தாமரைவண்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X