பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு ஜூஸ் வியாபாரம் செய்யும் கிராம மக்கள்

Added : மே 15, 2019
Advertisement

திருக்கோவிலுார்: கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இயற்கை நமக்கு பல்வேறு வழிகளை கொடுத்திருந்தாலும், கரும்பு ஜூஸ் உடலில் நீர் இழப்பை கட்டுப்படுத்தி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் அருமருந்தாக விளங்குகிறது.திருக்கோவிலுார் அடுத்த வடியாங்குப்பம். இக்கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்.திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் என நகரங்களிலும், நெடுஞ்சாலைகளில் மர நிழல்களிலும் கடைகளை அமைத்து, சுவையான ஜூஸ் தயாரித்து விற்பனை செய்கின்றனர். ஒரு கிராமமே இப்பணியில் ஈடுபட்டு இருப்பது ஆச்சரியமான விஷயம்.முற்றிலும் விவசாயத்தையே நம்பி இருக்கும் இக்கிராமத்தினர், மாற்றுத் தொழிலாக கரும்பு ஜூஸ் கடையை நடத்துகின்றனர். இதன் மூலம் ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்தினர் 1000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.வெயில் காலங்களில் விற்பனை ஜோராக இருந்தாலும், குளிர்காலமான கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கடையை மூடி விட்டு விவசாயத்தில் இறங்கி விடுகின்றனர். மற்ற ஒன்பது மாதங்களிலும் இவர்களின் முழுநேர தொழிலே கரும்பு ஜூஸ் விற்பனைதான். குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் கூடுதல் வருமானத்தை ஈட்டுகின்றனர்.கரும்பு ஜூசின் பயன்கள்இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் மற்றும் ஏராளமான ஆன்டி - ஆக்சிடன்ட்கள் உள்ளது. சளி, காய்ச்சல் வராமல் பாதுகாக்கிறது. உடல் சூட்டை தணிப்பதுடன் நோய் எதிர்ப்பு செல்களுக்கு ஊட்டமளிக்கிறது.கரும்பில் உள்ள மினரல்கள் பல் சொத்தை, வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. சிறுநீரக கற்களை கரையச் செய்கிறது. அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், அசிடிட்டியை போக்குகிறது. கரும்புச்சாற்றில் குளுக்கோசின் அளவு குறைவாக இருப்பதால், ரத்த அழுத்த நோயாளிகளுக்கும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்கின்றனர் மருத்துவர்கள்.இதுகுறித்து வடியாங்குப்பத்தை சேர்ந்த கரும்பு ஜூஸ் வியாபாரி முருகன், 41; கூறுகையில், 'எங்கள் கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோர் கரும்பு ஜூஸ் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். கரும்பு தோட்டத்தை 5 முதல் 6 பேர் சேர்ந்து மொத்தமாக விலை பேசி எடுத்து, தினசரி அவரவர் தேவைக்கேற்ற கரும்பை நாங்களே வெட்டி பிரித்துக் கொள்வோம்.தற்போது கடும் வறட்சி நிலவுவதால் கரும்பின் விலை ஒரு ஏக்கர் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது. ஜூஸ் போடுவதற்கு வீட்டு பெண்கள் கடையை திறந்து தயார்படுத்தி வைப்பார்கள். குடும்பத்துடன் இப்பணியில் ஈடுபடுவோம். வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வரை கூட லாபம் கிடைக்கும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X