பொது செய்தி

தமிழ்நாடு

பொதுத்தேர்வில் தேர்ச்சி அதிகரிப்பு

Added : மே 15, 2019
Advertisement

விழுப்புரம்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், தேர்ச்சி விழுக்காடு உயர்ந்ததையொட்டி மாவட்ட கல்வி மேம்பாட்டிற்கான பாராட்டு விழா நடந்தது.விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நம்ம விழுப்புரம் இணையதள அமைப்பு மற்றும் உலக இலக்கிய பேரவை, கல்வி அமைப்புகள் இயக்கங்கள் சார்பில் நடந்தது. விழாவிற்கு புரவலர் நந்தர்ஷா தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். இலக்கிய பேரவை தலைவர் மோகனசுந்தர் வரவேற்றார்.விழாவில், எழுத்தாளர் நடராஜன், சி.இ.ஓ., முனுசாமி ஆகியோர் பங்கேற்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினர்.நிகழ்ச்சியில், விழுப்புரம் கல்வி மாவட்ட அளவில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில், தலைமையாசிரியர்கள் சந்திரசேகர், ரவி, சுப்ரமணி, முருகவேல், இளமதி, தமிழ்ச் சங்க தலைவர் பாலதண்டாயுதம், எழுத்தாளர் செங்குட்டுவன், ராமமூர்த்தி, பேராசிரியர் சங்கர், கரிகால சோழன் பசுமைப்படை அகிலன், கோபிநாத் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவினை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பாலு ஒருங்கிணைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X