பொது செய்தி

தமிழ்நாடு

பொதுத்தேர்வில் சிறப்பிடம்

Added : மே 15, 2019
Advertisement

உடுமலை:உடுமலை, இரண்டாம் கிளை நுாலகத்தின் சார்பில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கவுள்ளனர்.

உடுமலை, இரண்டாம் கிளை நுாலகத்தில், பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஜி.வி., குழுமத்துடன் இணைந்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.இதனால், உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் பள்ளி அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள், நுாலகத்தில் அவர்கள் பெயர்களை பதிவு செய்யலாம்.மாணவர்கள், பெயர் மற்றும் புகைப்படம் ஒன்றும், மே 20ம் தேதி வரை நுாலகத்தில் சமர்ப்பித்து பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இத்தகவலை, இரண்டாம் கிளை நுாலக வாசகர் வட்டத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X