பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்புகளிலும் சில்லிங் மதுவிற்பனை 'ஜோர்!'

Added : மே 16, 2019
Advertisement

குற்றச்சம்பவங்கள் அதிகரித்தாலும் போலீஸ் 'கொர்்'
உடுமலை:குடியிருப்பு பகுதியிலேயே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்பவர்கள் அதிகரித்துள்ளதால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
உடுமலை போலீஸ் உட்கோட்டத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், 24 மணி நேரமும் மதுபானம் கிடைக்கும் வகையில், 'சில்லிங்' விற்பனை ஜோராக நடக்கிறது. நகரப்பகுதியில், வார்டு வாரியாக விற்பனைக்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, தொழிலாளர்களை குறி வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்கின்றனர். கணக்கம்பாளையம் உட்பட நகரை ஒட்டியுள்ள பகுதிகளில், அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் மது வகைகளை வாங்கி வந்து இருப்பு வைத்து விற்பனை செய்கின்றனர். இத்தகைய விற்பனை குறித்து, போலீசார் கண்டுகொள்ளாத நிலையில், ஆளுங்கட்சியினர் சிலருக்கு நேரடியாக வருவாயும் பிரித்தளிக்கப்படுவதாக புகார் உள்ளது.
இடைத்தேர்தலால் அமோகம்
சூலுார் சட்டசபை இடைத்தேர்தலை ஒட்டி, வரும் 17,18 மற்றும் 19ம் தேதிகளில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இந்த அறிவிப்பை பயன்படுத்தி, அதிக லாபத்துக்கு விற்பனை செய்ய, ஆயிரக்கணக்கான மதுபாட்டில்களை பல்வேறு இடங்களில், 'சில்லிங்' முறையில் விற்பனை செய்பவர்கள் பதுக்கி வைத்துள்ளனர்.மூன்று நாட்களுக்கு நகர, கிராமப்புறங்களில், தடையில்லாமல் மது கிடைக்க மேற்கொள்ளப்படும் இந்த அவல நடவடிக்கைகளையும், போலீசார் கண்டுகொள்ளவில்லை.மாவட்ட நிர்வாகமும் வழக்கம் போல மவுனம் காக்கிறது. டோர் டெலிவரி அடிப்படையில், போன் செய்பவர்களின் இடத்துக்கே, மதுபாட்டில்களை நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது.

குடியிருப்புகளில் அச்சம்
'சில்லிங்' முறையில் மது விற்பனை செய்பவர்கள் பெரும்பாலும், அதிக வீடுகளை கொண்ட குடியிருப்புகளையே தேர்வு செய்கின்றனர். உதாரணமாக, குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குட்பட்ட சோமவாரப்பட்டி கிராமத்தில், சுற்றிலும் வீடுகள் உள்ள இடத்தில், மதுவகைகள், காலை, 6:00 மணி முதலே ஜோராக விற்பனை செய்யப்படுகிறது.இதனால், அருகிலுள்ள வீடுகளை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் வெளியில் நடமாட முடியாத நிலை காணப்படுகிறது. பெருகி வரும் குற்றச்சம்பவங்களுக்கு, 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் கிடைப்பதே முக்கிய காரணம் என்பதை உணர்ந்தாவது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X