பொது செய்தி

தமிழ்நாடு

ஆதிவாசிகளின் பாரம்பரிய கண்காட்சி

Added : மே 16, 2019
Advertisement
 ஆதிவாசிகளின் பாரம்பரிய கண்காட்சி

கோத்தகிரி:கோத்தகிரியில் இயங்கி வரும், நீலகிரி ஆதிவாசி நல சங்கம் (நாவா) சார்பில், நடந்து வரும் பழங்குடியினரின் பாரம்பரிய கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
கோத்தகிரியில் இயங்கி வரும் நாவா சார்பில், ஆதிவாசி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு, கோடை விழாவின் ஒரு பகுதியாக, பழங்குடியினரின் பாரம்பரிய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு கட்டமாக, ஆதிவாசி மக்களின் வாழ்க்கை வரலாறு, பாரம்பரிய கைவினை பொருட்கள் கலாச்சார நடனம், தொழில், உணவு முறை, பாரம்பரிய மூலிகை மருத்துவம், வாழ்வியல், பள்ளிக்குழந்தைகளுக்கு பொம்மை கண்காட்சி, குறித்த புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. கடந்த 30 ஆம் தேதி துவங்கிய கண்காட்சி வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. இக்கண்காட்சியை, சுற்றுலா பயணிகள், பண்டைய பழங்குடியின பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் கண்டுகளித்து செல்கின்றன.குறிப்பாக, இங்கு திரளாக வரும் சுற்றுலாப் பயணிகள், ஆதிவாசி மக்கள் வசிக்கும் வீடுகளின் மாதிரி குடில்கள் அருகில் நின்று ஆர்வத்துடன் 'செல்பி' எடுத்து செல்கின்றனர்.
நாவா செயலாளர் ஆல்வாஸ் கூறுகையில், ''நடப்பாண்டு, ஆதிவாசி மக்களின் பாரம்பரிய திருவிழா மற்றும் கண்காட்சியை, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டுகளித்து வருகின்றனர். எதிர்காலத்தில், பார்வையாளர்களின் வருகை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X