ஊட்டியில் நைட் பஜார் நேரத்தை மாற்றினால் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் 'நைட் பஜார்' நேரத்தை மாற்றினால் மகிழ்ச்சி

Added : மே 16, 2019
Share
 ஊட்டியில் 'நைட் பஜார்' நேரத்தை மாற்றினால் மகிழ்ச்சி

ஊட்டி:'ஊட்டியில், சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு 'நைட் பஜார்' நேரத்தை மாற்ற வேண்டும்,' என,சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஊட்டியில், கோடை சீசன் கடந்த மே, 1ம் தேதி துவங்கியது. சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.அரசு தாவரவியல் பூங்காவில், மே 17 முதல் 21 வரை, ஐந்து நாட்கள் மலர் காட்சி மற்றும்25, 26 ஆகிய இரண்டு நாட்கள் குன்னூரில்பழக்கண்காட்சி ஆகிய வை மட்டும் நடக்கிறது.கடந்தாண்டு முதல் தாவரவியல் பூங்கா சாலையில் 'நைட் பஜார்' நடத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போதும், கடந்த மூன்று நாட்களாக, 'நைட் பஜார்' நடந்து வருகிறது. மாலை, 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடத்தப்படுகிறது.சுற்றுலா பயணிகள் கூறுகையில், ''நைட் பஜார்' சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மாலை, 4:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடத்தினால் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வசதியாக இருக்கும்.உள்ளூர் வியாபாரிகளும் பயனடைவர். இதனால், நேரத்தை மாற்ற மாவட்ட நிர்வாகம்பரிசீலனை செய்ய வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X