பொது செய்தி

தமிழ்நாடு

இருள் சூழ்ந்த கிராமம் இரவில் மக்களுக்கு சிரமம்

Added : மே 16, 2019
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரி கேர்பெட்டா ஒசஹட்டி கிராமத்தில், நான்கு மாதங்களுக்கு மேலாக தெரு விளக்குகள் எரியாததால் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோத்தகிரி கோடநாடு சாலையில் கேர்பெட்டா ஒசஹட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கோடநாடு பிரதான சாலையோரத்தில் அமைந்துள்ள இக்கிராமத்தில், நான்கு மாதங்களுக்கு மேலாக, தெரு விளக்குகள் எரியாததால், இப்பகுதி, இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், மக்கள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமத்திற்கு இடையே, வெளியே சென்று வருகின்றனர்.மேலும், கிராமத்தை ஒட்டி தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ளதால், கரடி, சிறுத்தை மற்றும் காட்டெருமை உள்ளிட்ட, வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இருள் சூழ்ந்த கிராமத்திற்குள் அடிக்கடி வனவிலங்குகள் வந்து செல்வதால், கிராம மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது. இதுகுறித்து, கிராம மக்கள் பலமுறை தெரிவித்தும், கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் கிராமத்தில் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X