பொது செய்தி

தமிழ்நாடு

குன்னுாரில் விபத்து அபாயம் நடைபாதை வசதி தேவை

Added : மே 16, 2019
Advertisement
 குன்னுாரில் விபத்து அபாயம் நடைபாதை வசதி தேவை

குன்னுார்:குன்னுார் லெவல் கிராசிங் காந்தி சிலை அருகே, நடைபாதை இல்லாததால், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
குன்னுார் 'லெவல் கிராசிங்' பகுதி, மேட்டுப்பாளையம், ஊட்டி, சிம்ஸ்பார்க், மார்க்கெட், டி.டி.கே., சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக உள்ளது. ஊட்டி - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை முக்கிய சாலையாக இருப்பதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இங்குள்ள காவல் கூண்டு அருகே போக்குவரத்து போலீசார் ஒருவர் அல்லது இருவர் போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர்.அதில், ஓட்டுப்பட்டறை, டென்ட்ஹில் மற்றும் தாலுகா அலுவலகத்தில் இருந்து வரும் வாகனங்கள் லெவல் கிராசிங் குடை அருகில் வந்து நிறுத்தி விடுகின்றனர். இதனால், போக்குவரத்தை சீரமைக்க போலீசாரும் திணறுகின்றனர்.நடைபாதை இல்லாததால், இங்கு சாலையை கடக்கும் பொதுமக்கள் வாகனங்களுக்கு இடையே நடந்து செல்ல வேண்டியுள்ளதால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் காந்தி சிலை அருகே தெருவிளக்குகள் எரிவதில்லை.
குன்னுார் மக்கள் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''லெவல் கிராசிங் அருகே ஓட்டுப்பட்டறை சாலை பிரியும் இடத்தில் வேகத்தடை அமைப்பதுடன், காந்தி சிலை முன்புறம், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதை தடை செய்து, அங்கு நடைபாதை அமைக்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டருக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X