கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மார்ட்டின் நிறுவன 'கேஷியர்' மரணம்: தெளிவான அறிக்கை தாக்கலுக்கு உத்தரவு

Updated : மே 16, 2019 | Added : மே 16, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன, 'கேஷியர்' மரணம் தொடர்பான, பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்றம், தௌிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.சோதனை:கோவை மாவட்டம், உருமண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர், பழனிசாமி. இவர், லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில், கேஷியராக பணியாற்றி வந்தார்.மார்ட்டினுக்கு சொந்தமான

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன, 'கேஷியர்' மரணம் தொடர்பான, பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்றம், தௌிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.latest tamil news
சோதனை:


கோவை மாவட்டம், உருமண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர், பழனிசாமி. இவர், லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில், கேஷியராக பணியாற்றி வந்தார்.மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கேஷியர் பழனிசாமியிடமும் விசாரணை நடந்தது.

இந்நிலையில், காரமடை, வௌ்ளியங்காடு அருகே குளத்தில், பழனிசாமி பிணமாக கிடந்தார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, காரமடை போலீசில், பழனிசாமியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், பழனிசாமியின் மகன், ரோகின்குமார் தாக்கல் செய்த மனு:மார்ட்டின் நிறுவன வளாகத்துக்குள், என் தந்தையை சித்ரவதை செய்து, கொலை செய்துள்ளனர். உடலை, தண்ணீர் தேங்கியிருந்த இடத்தில் வீசி உள்ளனர். இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்ற வேண்டும். பிரேத பரிசோதனையின் போது, நாங்கள் தேர்வு செய்யும் டாக்டர் இருக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news
அதிருப்தி:


மனுவை விசாரித்த, நீதிபதிகள், எஸ்.வைத்தியநாதன், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.'பிரேத பரிசோதனை செய்தபோது எடுத்த, வீடியோ மற்றும் கோட்டாட்சியர் அறிக்கையை, தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை, பிணவறையில், உடலை வைத்திருக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, வழக்கு, நீதிபதிகள், சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கைக்கு, நீதிபதிகள், அதிருப்தி தெரிவித்தனர்.

'உடலில் ஏற்பட்ட காயங்கள், உயிரோடு இருந்தபோது ஏற்பட்டதா, இறந்த பின் ஏற்படுத்தப்பட்டதா?' என, கேள்வி எழுப்பினர்.தெளிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை, இன்றைக்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
16-மே-201910:39:12 IST Report Abuse
நக்கீரன் இந்தியாவில் நல்லவர்களுக்கு காலமில்லை என்பதற்கு இந்த கொலையே ஒரு சாட்சி. அதற்க்கு நீதிமன்றங்களும் காவல்துறையும் மவுன சாட்சிகள். எல்லாமே பெயரளவிற்குத்தான்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
16-மே-201909:05:33 IST Report Abuse
அசோக்ராஜ் முன்னாள் முதல்வரின் உடலுக்கு இடம் கேட்டபோது நோட்டிஸ், அறிக்கை என்றா காலம் கடத்தினீர்கள்? உடலை பிணவறையில் வைக்க சொன்னீர்களா? இரவோடு இரவாக வீட்டில் பஞ்சாயத் நடத்தி உத்தரவு போட முடிந்ததல்லவா? சாதாரண மனிதனின் உடல் என்றால் அவ்வளவு கேவலமா?
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
16-மே-201909:02:53 IST Report Abuse
அசோக்ராஜ் இறந்தவர் உடலை "அதுவரை" பிணவறையில் வையுங்கள் என்று நீதிபதி உத்தரவு. குடும்பத்திரனரின் மனம் என்ன பாடுபடும்? இறந்தவர் உடலுக்கு இயன்ற வரை விரைவாக மரியாதை, சடங்குகள் செய்து, திதி தர்ப்பணம் கொடுத்து மறுவுலகுக்கு அனுப்ப வேண்டாமா? அறிக்கைக்கு அவகாசம் கொடுத்து. கிடைத்தபின் மேலும் விரிவாக அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என்று மேலும் அவகாசம் கொடுத்து, உடலை மாதக்கணக்காக வைத்துக்கொண்டே இருப்பது சரியா? மனித உரிமையை இவர்களே இப்படி மீறலாமா? யாருக்கும் மனசாட்சி இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X