பொது செய்தி

தமிழ்நாடு

விஸ்வரூபம் எடுக்கிறது போலி சான்று விவகாரம்

Added : மே 16, 2019
Advertisement

சென்னை: சென்னையில், பள்ளி, கல்லுாரி, விடுதிகளுக்கு, போலியாக சுகாதார சான்று வழங்கப்பட்ட விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டாக வழங்கப்பட்ட சுகாதார சான்று களை, மாநகராட்சி அதிகாரிகள், ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.

சென்னை மாநகராட்சியில், கல்வி நிறுவனங்கள், விடுதிகள், கட்டாயமாக, சுகாதார சான்று பெற வேண்டும்.இதற்கு விதிக்கப்பட்டு உள்ள நிபந்தனைகளின் படி, பல நிறுவனங்களில், கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், புரோக்கர்கள் மூலம், போலியாக சான்றிதழ்களை பெறுவது வாடிக்கையாக நடந்துவந்தது.விசாரணைஇந்த விவகாரம், சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. அடையாறு மண்டலத்தில் இருந்து, 76 போலி சுகாதார சான்றுகள், சென்னையின் பல்வேறு பகுதி களில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.புரோக்கர்களுடன், கூட்டணி வைத்த சில சுகாதார அதிகாரிகள், கையெழுத்தை போலியாக போட்டு, சான்றிதழ் வழங்கி உள்ளனர். இந்த போலி சான்று தொடர்பாக, மாநகராட்சி விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இது குறித்து, நமது நாளிதழில், நேற்று விரிவாக செய்தி வெளியிட்டது. இதையடுத்து, உயர் அதிகாரிகள், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.சென்னை மாநகராட்சியில், 2018 ஏப்ரல் முதல், 2019 மார்ச் வரை வழங்கிய, அனைத்து சுகாதார சான்றுகளையும், உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.விடுமுறைஇதற்காக, 15 மண்டலங்களில் இருந்து, சுகாதார சான்று வழங்கிய பதிவு கோப்புகள் மற்றும் பரிசீலனைக்கு பெறப்பட்ட தீயணைப்பு நிலைய சான்று, கட்டட உறுதித்தன்மை சான்று, ரசீது நகல் உள்ளிட்டவை, ரிப்பன் மாளிகையில் உள்ள உயர் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.இதில், ஏதாவது ஆவணங்கள் இல்லாமல், சுகாதார சான்று வழங்கப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய உள்ளனர்.மேலும், சுகாதார சான்று பெறாமல் செயல்படும் நிறுவனங்கள் எத்தனை, அவை எப்படி செயல்படுகிறது, அங்கு, போலி சான்று ஏதாவது வழங்கப்பட்டுள்ளதா போன்ற கோணங்களிலும், அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.தற்போது, அடையாறு மண்டல சுகாதார அதிகாரி உஷா, 15 நாட்கள் விடுமுறையில் உள்ளார். அதேபோல், போலி சான்று தயாரித்து கொடுத்ததாக, புரோக்கரால் குற்றம் சாட்டப்பட்ட, 179வது வார்டில் பணி புரிந்த சுகாதார ஆய்வாளர், குணசீலனும், 15 நாட்கள் விடுமுறையில் உள்ளார்.இருவரும் விடுமுறை முடித்து வந்ததும், விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள், விசாரணையை மேலும் தீவிரப்படுத்த உள்ளனர்.போலி சுகாதார சான்று விவகாரம், வெளியே வராத வகையிலும், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத வகையிலும், விசாரணையை கிடப்பில் போட, சில சுகாதார அதிகாரிகள் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர். இதற்காக, சில அமைச்சர்கள் உதவியை நாடி உள்ளனர். அமைச்சர்களின் உதவியாளர்கள், நான்கு சட்டசபை இடைத்தேர்தல் முடிந்ததும், உதவுவதாக உறுதி அளித்துள்ளனர். இந்த முறைகேடு குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, அமைச்சர்களின் உதவியாளர்கள், பின்வாங்கி உள்ளனர். செய்தியால், விசாரணை நியாயமாக நடந்து, மோசடி பேர்வழிகள் மீது நடவடிக்கை பாயும் என நம்புகிறோம்.மாநகராட்சி அதிகாரிகள்பெருங்களத்துாரில் மாநகராட்சி சான்றிதழ்!மாநகராட்சி, சுகாதார அதிகாரிகளின் கையெழுத்தை, போலியாக இட்டு தயாரித்த சுகாதார சான்று, பெருங்களத்துாரில் உள்ள ஒரு பெண்கள் விடுதிக்கும் வழங்கப்பட்டு உள்ளது.இது, மாநகராட்சி அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பெருங்களத்துார், காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் உள்ளது. பேரூராட்சி பகுதியான பெருங்களத்துாருக்கு, சென்னை மாநகராட்சி சுகாதார சான்று செல்லாது.இது தெரிந்தே, பெண்கள் விடுதிக்கு, போலி சான்று வழங்கப்பட்டு உள்ளது. அப்படியென்றால், குறிப்பிட்ட பெண்கள் விடுதியில், போதிய கட்டமைப்பு வசதி இல்லாமல், மாவட்ட நிர்வாகம், சுகாதார சான்று வழங்க மறுத்திருக்க வேண்டும்.இது தெரிந்தே, குறுக்கு வழியில், புரோக்கர்கள் வழியாக மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மூலம், போலி சான்று பெற்றிருக்க வேண்டும்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, பள்ளி, கல்லுாரி, விடுதிகளை ஆய்வு செய்தால், இந்த போலி சான்று விவகாரம், சங்கிலி தொடராக இருக்கும் என, சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X