பொது செய்தி

தமிழ்நாடு

யானைகளை ஓட வைக்கும் 'பாட்டில்' வேலி

Added : மே 16, 2019 | கருத்துகள் (5)
Advertisement
 யானைகளை ஓட வைக்கும் 'பாட்டில்' வேலி

வீடுகளை பாதுகாக்க வித்தியாச வழி
பந்தலுார்:பந்தலுார் அருகே, காபி காடு கிராமத்தில், யானைகளிடமிருந்து தப்பிக்க கண்ணாடி பாட்டில் வேலி அமைத்துள்ளனர்.
பந்தலுார் அருகே, காபி காடு கிராமம் அமைந்துள்ளது. இதன் இரண்டு பக்கங்களிலும் வனப்பகுதிகள் அமைந்துள்ளதுடன், யானைகளின் முக்கிய வழித்தடங்களை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. மேலும், வனம், தண்ணீர் வசதி உள்ளதால் யானைகள் தினசரி இங்கு வந்து செல்லும், இந்த பகுதியில் பகல் நேரத்தில் ஊருக்குள் புகுந்த யானையால் தாக்கப்பட்டு பலரும் உயிரிழந்துள்ளனர்.இந்த கிராமத்திற்கு ஆட்டோ, ஜீப் போன்ற வாகனங்களும் செல்லாததால், 500 மீட்டர் துாரமுள்ள சாலையை நடந்து கடக்க வேண்டும். இதனால், தனியாக யாரும் நடந்து செல்ல முடியாது. இங்கு வரும் யானைகள், வீடுகளுக்கு 'விசிட்' செய்யாமல் தடுக்கும் வகையில், வீடுகளை சுற்றிலும் கம்பி கட்டப்பட்டு, அதில் காலி கண்ணாடி பாட்டில்கள் தொங்க விடப்பட்டுள்ளது. யானைகள் வேலி அருகே வரும்போது, பாட்டில்கள் ஒன்றோடு ஒன்று உரசி, சப்தம் எழுப்பும்போது, யானைகள் பயந்து சென்று விடுகிறது.
மக்கள் கூறுகையில், 'காட்டு யானைகளால் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த நுாதன முறை பெரும் பயன்தருகிறது. பாட்டிலை உரசினால் ஏற்பாடும் ஒலி, யானைகளை ஓட வைக்கிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ranjith kumar - coimbatore,இந்தியா
22-மே-201916:18:17 IST Report Abuse
ranjith kumar யானை பாட்டிலின் சத்தத்திற்கு பயப்படவில்லை, ஆனால் பாட்டில் காலை கிழித்து உள்ளே சென்று விட்டால், அதை வெளியே எடுப்பது யானைக்கு சிரமம். தவிர யானை நீண்ட தூரம் பயணம் செய்வதும் சிரமம். அது சீழ் பிடித்து சிரமப்பட்டு சாகும். ஆகையால் யானை பாட்டிலை பார்த்து பயப்படுகிறது. யானையை விரட்டுவதற்கு இது ஒரு மோசமான வழிமுறை ஆகும்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
19-மே-201901:53:00 IST Report Abuse
 nicolethomson ஐயோ இந்த ஐடியாவை ஸ்டாலினுக்கு யாரும் சொல்லிடாதீங்க இதன் மூலம் டாஸ்மாக் பாட்டில்களை செயற்கை கிராக்கி ஏற்படுத்திடுவாரு அவங்க டிவி யா வெச்சு
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
19-மே-201903:33:04 IST Report Abuse
Anandanஅப்போ அடுத்த ஆட்சி திமுகானு சொல்லவாறீங்களா?...
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
18-மே-201916:44:42 IST Report Abuse
mohan வீட்டை சுற்றி மிளகாய் பயிரிட்டால் யானை அருகில் வராது... மிளகாய் தோரணமும் அமைக்கலாம். யானை தூர வருவது தெரிந்தால், வீட்டில் ஒரு சட்டியில் வத்தலை போட்டு கருகும் படி வறுத்தால், யானை 100 தூரத்திற்கப்பால் சென்று விடும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X