கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜாமின்,மனு,நடிகர்,கமல்,அறிவுரை,கோர்ட்,தள்ளுபடி

ம.நீ.ம., கமலின் சர்ச்சைக்குரிய 'ஹிந்து தீவிரவாதம்' பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்துள்ளனர். இதன்காரணமாக கமல் மீது டில்லி உள்பட 17 இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவரது கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் போலீஸ் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல் தரப்பில் நேற்று பகல் முறையிடப்பட்டது. அதற்கு 'முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தால் அது அவசர வழக்காக நாளையே விசாரிக்கப்படும்' என உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியது. இதையடுத்து கமல் நேற்று முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்; அது இன்று விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து 12ல் பள்ளப்பட்டி அண்ணாநகரில் கமல் பிரசாரம் செய்தார். அப்போது 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் தான் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்' என கமல் பேசினார்.

அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹிந்து மதத்திற்கு அவதுாறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பல்வேறு

தரப்பில் கண்டனம் எழுந்தது. கரூர் மாவட்ட ஹிந்து முன்னணி செயலர் ராமகிருஷ்ணன் அரவக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மதக் கலவரத்தை துாண்டும் வகையில் பொது இடத்தில் பேசியதாக கமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல் டில்லி உள்பட 17 இடங்களில் கமல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.புகழேந்தி முன் கமல் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆஜராகி ''கமல் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். அதற்கான மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்'' என்றார். அதற்கு நீதிபதி 'விடுமுறைக்கால நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரும் மனுக்களை விசாரிக்க இயலாது.

இந்த விவகாரத்தில் தற்போது தான் வழக்குப் பதியப்பட்டு உள்ளது. முன்ஜாமின் மனு தாக்கல் செய்தால் அது நாளையே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்' என்றார்.

இதற்கிடையில் மக்கள் நீதி மையம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் பிரசாரத்தின் போது கமல் பேசிய பேச்சுக்காக அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ. பிரமுகரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுவை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: இந்த நீதிமன்றத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது. 'பிரசாரத்தில்

ஜாதி, மதம் அடிப்படையில் மக்களை துாண்டிவிடும் வகையில் பேசுவதை கட்டுப்படுத்த வேண்டும். கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்' என மனுதாரர் கோரியுள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையம் தான் தகுந்த முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரவில் தாக்கலான முன்ஜாமின் மனு!

உயர் நீதிமன்றத்தின் அறிவுரைப்படி நேற்று இரவு கமல் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு: நான் ஹிந்து பெற்றோருக்கு பிறந்துள்ளேன். பல்வேறு மதங்களுக்கு இடையே உலக சகோதரத்துவம் மற்றும் அமைதியுடன் வாழ்வதை விரும்புகிறேன். எந்த மதத்திற்கும் விரோதமாக பேசவில்லை. 'காந்தியை ஏன் கொன்றேன்' என்ற புத்தகத்தில் 'ஹிந்துக்களுக்கு எதிராக காந்தி செயல்பட்டார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்தி தான் காரணம்' என கோட்சே தெரிவித்துள்ளார். நான் நாதுராம் கேட்சே பற்றி தான் பேசினேன்; ஹிந்துக்களுக்கு எதிராக பேசவில்லை. எனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை. மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசவில்லை. சிலர் ஆர்வக்கோளாறில் இதை மதப் பிரச்னையாக சித்தரிக்கின்றனர். என் நாக்கை துண்டிக்க வேண்டும் என மாநில அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். எனக்கு அச்சுறுத்தல் உள்ளது. நான் பேசியதை புகார்தாரர் நேரடியாக பார்க்கவில்லை. தவறாக என்னை வழக்கில் சேர்த்துள்ளனர். முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியுள்ளார்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hema - Geneva,சுவிட்சர்லாந்து
17-மே-201913:42:20 IST Report Abuse

Hemaநான் ஒரு மன நல மருத்துவர்- விசேட பாண்டித்தியம் பெற்று சுவிஸ்ஸில் பணிபுரிகிறேன். உண்மையை பேசுபவர்களை தடை செய்வது தான் இந்தியநாட்டின் அரசியல் நியாயமோ? கமல் சொன்னதை முழுமையாக கேட்க அவருக்கு கூடும் மக்களின் கூட்டத்தை பார்த்து பயந்து அவரை பிரச்சாரம் பண்ண விடாமல் தடை செய்து தங்கள் தோல்வியை வெற்றியாக்க கள்ள வழி பிஜேபி அரசு தேடுகின்றது . அதட்கு ஊழல் கட்சிகள் குளறுவதில் ஆச்சரியமா? அகிம்ஸாயை உலகத்துக்கு போதித்தவர் மகாத்மா. அதே வழியில் கறை படாத அரசியலை கொண்டு வர துடிக்கும் கமலை, தனி மனிதன் சுதந்திரத்தை தடுத்து உலக நாயகனை அமுக்க நினைக்காதீர்கள். தமிழனை நேர்மையான தமிழன் ஆளவந்தால் அவருக்கு வழி விடுங்கள், அவர்மற்ற அரசியல்வாதிகள் போல் தன் குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவில்லை என்பதை புரிந்து மாற்றதுக்கு அறிவு பூர்வமாக சிந்தித்து உங்கள் வாழ்வுக்கு ஒளிவிளக்கு ஏற்றுங்கள் Kamal is correct - He is telling the true story - I am a Hindu but why you can't accept the truth ? கல் வீசிய நபர் பிஜேபி என்று எல்லா பத்திரிகைகளும் எழுதி உள்ளன . கமல் உண்மை சரித்திரத்தை சொன்னதை திரிபு படுத்தி மதத்தினால் அரசியல் செய்யும் பிஜேபி தாக்குதல்களை தூண்டி விட்டு கமலை தேர்தல் பிரச்சாரம் செய்யாமல் தடுத்தவுடன் அவர்கள் வென்று விடுவார்களா? சத்யம் ,உண்மை ,நேர்மை தான் வெல்லும் . நாளை நமதே காந்தியின் பேரனே கமல் சொன்னது சரி என்று விட்ட்டார். இனியாவது அமைதியாகி அகிம்சா வழியில் நடவுங்கள்.

Rate this:
Vasanth - Chennai,இந்தியா
18-மே-201901:26:06 IST Report Abuse

Vasanthhema , நீங்கள் உடனே மீண்டும் ஒரு நல்ல மனநல மருத்துவரை பார்ப்பது மிக நல்லது. யார் என்ன செய்தாலும் இந்துக்களை மட்டுமே அவதூராக பேச்சுக்களை மட்டும் பேசும் கமல், சீமான், மானுஷ்ய புத்ரன்,..........போன்ற கெட்ட ஆசாமிகள் பேச்சுக்களை திரும்ப திரும்ப கேட்டு உங்கள் மூளை குழம்பி விட்டது. தயவு செய்து நீங்கள் காசு கொடுத்து மற்றும் சிபாரிசில் வாங்கிய தகுதி சான்றிதழை திரும்ப கொடுத்து விடுங்கள். அது உங்கள் கைகளில் இருப்பது அதற்க்கு அவமானம். ஆதரவு கேட்டு மாநிலமாநிலமாக, ஒவ்வொரு அரசியல்வாதிகளிடம், (உண்மையான நண்பன் ரஜினியின் "ஆன்மிக அரசியல்" பற்றிய கேள்விக்கு ஆன்மிகம் அரசியலா? என எவ்வளவு நையாண்டியாக ஒரு சிரிப்பை சிரித்து கேலி செய்து விட்டு) வெட்கமே இல்லாமல் எனக்கு ஆதரவு தருவார் என நம்புகிறேன் என்று பத்திரிக்கையாளர்களிடம் திரும்ப திரும்ப பேசியவருக்கா கூட்டம் கூடுகிறது என்று பிதற்றுகிறீர்கள். இப்பொழுது கூடுகிறது உண்மைதான் அவரை புரட்டியெடுக்க. ..........சொன்னது நடந்து விட்டது. இந்துக்கள் என்றால் எவ்வளவு கேவலமாகவும் பேசலாம் என்ற எண்ணம் நிறைய பேருக்கு வந்து விட்டது. இந்துக்கள் என்றால் என்ன நினைத்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களது முந்தைய பதிவை விட உளறல்கள் அதிகமாக உள்ளது. அவர் துளியும் ஒழுக்கமில்லாத, தொழிலும் சாதிக்க முடியாமல் அரசியலை தொட்டவர். .............உண்மையில் கமல் நேர்மையான மனிதன் என்றால், நீங்கள் உண்மையிலே கமலை மதிப்பவராக இருந்தால் இந்த கேள்விகளுக்கு நேர்மையாக பதிலளியுங்கள். இதுதான் கமலின் ஆதாரம் news on all india radio in 1948 "Gandhi was killed by as assassin's bullet today. The assassin was a Hindu." ........... எங்கே முதல் இந்து தீவிரவாதீ வருகிறது? assassin - terrorist வித்யாசம் விளக்கவும் மானசீக பேரனாக நீதி கேட்ட இடம் நீதிமன்றமா? அல்லது இவரின் மூதாதையர்கள் வாழும் இடமா? அல்லது அங்கே இருப்பவர்கள் இவரின் மூதாதையர்களா? அங்கே இந்து ஒரு தீவிரவாதி என கூற அவசியம் என்னை? அங்கே, முதல் தீவிரவாதி இந்து என்றால் இரண்டாவது தீவிரவாதி யார் என்று ஏன் அங்கேயே கூறவில்லை? உங்களிடம் பதில் இல்லையெனில் நியாயத்தை ஏற்று கொள்வீர்களா? ...

Rate this:
KNR - Torronto,கனடா
18-மே-201918:25:47 IST Report Abuse

KNRஒரு விஷயத்தில் தீவிரம் காட்டி குற்றம் செய்பவர் தீவிரவாதி என்றே கொள்ளலாம்.... எங்கள் இறைவன் எங்கள் மனத்திலும் நாங்கள் வழிபடும் ஆலயத்திலும் வீற்றிருக்கிறான்... பொது வெளியில் தீவிரவாதத்தை எங்கள் எம்பெருமான் தூண்டிவிடுவதில்லை. மனிதனாக இருக்க செய்கிறான்.. சுயநலத்திற்காக, மிருகங்கள் ஆக்குவதில்லை, ...

Rate this:
KNR - Torronto,கனடா
18-மே-201918:26:55 IST Report Abuse

KNRSardar Vallabhai patel wrote a letter at the time of assassination "Gandhi was killed by Nadhuram Godse, a Hindu Fundamentalist" Note these points. ...

Rate this:
இராவணன் - colombo,இலங்கை
17-மே-201910:49:46 IST Report Abuse

இராவணன்மூன்று பெண்டாட்டிகளை கல்யாணம் செய்து குடும்பம் நடத்தியபிறகு DIVORCE செய்து விட்டு பேட்டியில் சொன்னார் .."எனக்கு கல்யாண வாழ்க்கையே சரிவராது என்று நான் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன் என்று "..பிறகு "எனக்கு அரசியல் வராது அரசியல் புரியாது என்னை விட்டுவிடுங்கள் என்றெல்லாம் பேட்டியில் சொன்னார் " பிறகு அரசியலுக்கும் வந்தார் .பின்னர் ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன் யாருடனும் கூட்டணி வைக்கமாட்டேன் என்று சொன்னவர் திமுக CONGRESS வுடன் கூட்டணிக்காக பேசினார் ..பிறகு ரஜினிக்கு எனக்கும் சித்தாந்த வேறுபாடுகள் உள்ளன அவருடன் சேரமாட்டேன் என்று சொன்னவர் ..பிறகு அவருடைய சப்போர்ட் ஐ நாடினார் ..பிறகு நான் நாகரீக அரசியலை கொண்டு வரப்போகிறேன் நான் டீசெண்டாக பேசுவேன் என்றெல்லாம் சொன்னவர் .இப்பொழுது மேடைக்கு மேடை அரசியல் நாகரீகம் இல்லாத பேச்க்களை பேசி ஹிந்து மத மக்கள் உணர்வுகளையும் புண்படுத்தும் படி பேசி உள்ளார் ,கொஞ்ச நாள் முன்பு காங்கிரஸுடன் கூட்டணி க்காக பாடுபட்டார் "ஏன் என்று கேட்டால் என் தந்தை காங்கிரஸ் காரர் என்றார் .தொழிலில் நஷ்டமடைவோம் என்ற பயத்தில் "நாட்டை விட்டே போகிறேன் " என்று சொன்னவர் ,இப்பொழுது நாட்டை காப்பாற்ற போகிறாராம் .இப்படி பேசியவர் நாளையே மீண்டும் அரசியல் கட்சிகளுடன் கூட்டணியும் வைப்பார் பிறகு தூய தமிழில் ஏதாவது டயலாக் பேசுவார் .."அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்று " ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தி ...என் தாய் தந்தை ஹிந்து ..அப்படியும் நான் பேசுகிறேன் என்றால் ....என்று டயலாக் அடிப்பார் ..பின்பு காந்தி பற்றி பேசவேண்டும் என்றால் என் தந்தை காங்கிரெஸ்க்காரர் ...நான் காந்தியின் கொள்ளுப்பேரன் என்பார் ..பிறகு ஹிந்து மக்களிடம் பேசும்போது மட்டும் நாத்திகம் பேசுவார் ..ஸ்ரீலங்கா குண்டுவெடிப்பு காரணகர்தாக்களை பற்றி பேசமாட்டார் ..நான் இடசாரி இல்லை என்பார் கம்யூனிஸ்ட் கனவான் களுடன் கொஞ்சிக்குலாவுவார் ..இப்படி முன்னுக்கு பிரான் முரணாக பேசுபவரின் பேச்சை உளறல் என்றே சொல்லவேண்டும்

Rate this:
இராவணன் - colombo,இலங்கை
17-மே-201910:47:13 IST Report Abuse

இராவணன்மூன்று பெண்டாட்டிகளை கல்யாணம் செய்து குடும்பம் நடத்தியபிறகு DIVORCE செய்து விட்டு பேட்டியில் சொன்னார் .."எனக்கு கல்யாண வாழ்க்கையே சரிவராது என்று நான் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன் என்று "..பிறகு "எனக்கு அரசியல் வராது அரசியல் புரியாது என்னை விட்டுவிடுங்கள் என்றெல்லாம் பேட்டியில் சொன்னார் " பிறகு அரசியலுக்கும் வந்தார் .பின்னர் ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன் யாருடனும் கூட்டணி வைக்கமாட்டேன் என்று சொன்னவர் திமுக வுடன் கூட்டணிக்காக பேசினார் ..பிறகு ரஜினிக்கு எனக்கும் சித்தாந்த வேறுபாடுகள் உள்ளன அவருடன் சேரமாட்டேன் என்று சொன்னவர் ..பிறகு அவருடைய சப்போர்ட் ஐ நாடினார் ..பிறகு நான் நாகரீக அரசியலை கொண்டு வரப்போகிறேன் நான் டீசெண்டாக பேசுவேன் என்றெல்லாம் சொன்னவர் .இப்பொழுது மேடைக்கு மேடை அரசியல் நாகரீகம் இல்லாத பேச்க்களை பேசி ஹிந்து மத மக்கள் உணர்வுகளையும் புண்படுத்தும் படி பேசி உள்ளார் ,கொஞ்ச நாள் முன்பு காங்கிரஸுடன் கூட்டணி க்காக பாடுபட்டார் "ஏன் என்று கேட்டால் என் தந்தை காங்கிரஸ் காரர் என்றார் .தொழிலில் நஷ்டமடைவோம் என்ற பயத்தில் "நாட்டை விட்டே போகிறேன் " என்று சொன்னவர் ,இப்பொழுது நாட்டை காப்பாற்ற போகிறாராம் .இப்படி பேசியவர் நாளையே மீண்டும் அரசியல் கட்சிகளுடன் கூட்டணியும் வைப்பார் பிறகு தூய தமிழில் ஏதாவது டயலாக் பேசுவார் .."அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்று " ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தி ...என் தாய் தந்தை ஹிந்து ..அப்படியும் நான் பேசுகிறேன் என்றால் ....என்று டயலாக் அடிப்பார் ..பின்பு காந்தி பற்றி பேசவேண்டும் என்றால் என் தந்தை காங்கிரெஸ்க்காரர் ...நான் காந்தியின் கொள்ளுப்பேரன் என்பார் ..பிறகு ஹிந்து மக்களிடம் பேசும்போது மட்டும் நாத்திகம் பேசுவார் ..ஸ்ரீலங்கா குண்டுவெடிப்பு காரணகர்தாக்களை பற்றி பேசமாட்டார் ..நான் இடசாரி இல்லை என்பார் கம்யூனிஸ்ட் கனவான் களுடன் கொஞ்சிக்குலாவுவார் ..இப்படி முன்னுக்கு பிரான் முரணாக பேசுபவரின் பேச்சை உளறல் என்றே சொல்லவேண்டும்

Rate this:
மேலும் 103 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X