அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
திருப்பரங்குன்றம் தொகுதியில் பணப்பட்டுவாடா 'ஜோர்'
இதற்கு மட்டும் அனைத்து கட்சிகளும் கூட்டணி
தேர்தல் பறக்கும் படைகள் ‛'கொர்...'

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யும் பணியை கட்சிகள் கன ஜோராக செய்து வருகின்றன.பணப் பட்டுவாடாவை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.

திருப்பரங்குன்றம்,இடைத்தேர்தல்,பணப் பட்டுவாடா,ஜோர்


மே 19 ல் தேர்தல் நடக்க உள்ளது. அ.தி.மு.க., வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரம் செய்தனர். அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க., வேட்பாளர் சரவணனை ஆதரித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் வீடுவீடாக பிரசாரம் செய்கின்றனர். இதுபோல் அ.ம.மு.க., வேட்பாளர் மகேந்திரனுக்காக தினகரன் எம்.எல்.ஏ., நடிகர்கள் செந்தில், சரஸ்வதி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரசாரம் ஒருபக்கம் நடந்தாலும் பணப் பட்டுவாடா செய்வதிலும் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதன்படி ஒரு ஓட்டுக்கு ஒரு கட்சி 2000 ரூபாய், மற்றொரு கட்சி 1000 ரூபாய், இன்னொரு கட்சி 1000 ரூபாய் வீதம் நேற்று முன்தினம் முதல் (மே 14) பணப் பட்டுவாடா செய்ய துவங்கியுள்ளன.

பணப் பட்டுவாடா செய்ய வட மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மதுரை உட்பட திருப்பரங்குன்றம் தொகுதியை சுற்றி அபார்ட்மென்ட், வீடுகள், ஓட்டல்களில் முகாமிட்டுள்ளனர். இவர்கள், உள்ளூர் நிர்வாகிகள் உதவியுடன் வாக்காளர்களை தேடி சென்று பட்டுவாடா செய்கின்றனர். பணப்பட்டுவாடா செய்வதில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைத்து, யாரும் யாரையும் தேர்தல் கமிஷனில் புகார் தெரிவிக்க கூடாது என ஒற்றுமையாக உள்ளன.

நேற்று முன்தினம் இரவு வளையங்குளம், எலியார்பத்தி உள்ளிட்ட பகுதிகளில் மூன்று கட்சியினருமே பட்டுவாடா செய்தனர். 'ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஒரு பகுதியில் ஓட்டுக்கள் சரியாக கிடைக்காது' என தெரியவந்தால் அந்த ஓட்டுக்களை கவர அப்பகுதி வாக்காளர்களுக்கு மட்டும் அந்த குறிப்பிட்ட கட்சி சார்பில் அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வரை பட்டுவாடா செய்யப்படுகிறது. விடுபட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் பட்டுவாடா செய்ய வியூகங்கள் வகுத்துள்ளனர். உள்ளூர் நிர்வாகிகளின் கையில் பணம் கொடுக்கப்பட்டு, பட்டுவாடா செய்யப்படாததால் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

உற்சாகம்:


பட்டுவாடாவால் திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் படுஉற்சாகத்தில் உள்ளனர். பணப் பட்டுவாடாவுடன் கட்சியினர் பிரசாரத்திற்கு சென்றால் அதற்கும் பணம் வழங்கப்படுகிறது. இதன்படி பெண்களுக்கு தலா 200 ரூபாய், ஆண்களுக்கு தலா 200 ரூபாய் மற்றும் இரவில் 'சரக்கு' மற்றும் அசைவ சாப்பாடு என சலுகைகள் வழங்கி அசத்துகின்றன. இதனால் பெரும்பாலான கிராமங்களில் மக்கள் யாரும் வழக்கமான விவசாய மற்றும் கூலி வேலைகளுக்கு செல்வதில்லை.

கட்சியினர் அழைக்கும் பிரசாரங்களுக்கு சென்று பணம் பெற்று வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு உள்ளூர் கட்சி நிர்வாகிகள் வாகன ஏற்பாடும் செய்து பிரசாரம் முடிந்தவுடன் மீண்டும் அவர்களை வீடுகளுக்கு சென்று இறக்கி விடுகின்றனர். இதனால் மினி வேன், டிராக்டர், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அவற்றின் நாள் வாடகையும் அதிகரித்துள்ளது.

கொர்...கொர்...


லோக்சபா தேர்தலிலின்போது தேர்தல் பறக்கும் படையினர் சோதனை அடிக்கடி நடந்தது. பணம், பொருட்கள், நகை பிடிக்கப்பட்டது. உரிய ரசீதுகள் இல்லாத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் இருந்தும்

Advertisement

பெயரளவில் தான் சோதனை நடத்துகின்றனர். கட்சிகள் ஜரூராக பணப் பட்டுவாடா செய்துவரும் நிலையில் இதுவரை பெரிய அளவில் பணம் ஏதும் பறிமுதல் செய்யப்பட்டதாக எவ்வித தகவலும் இல்லை. சில இடங்களில் பெயரளவில் ஓரிருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க.,வினர் போலீசில் ஒப்படைப்பு:

திருப்பரங்குன்றம் தொகுதி வில்லாபுரம் வாசுகி தெருவில் பறக்கும் படை தேர்தல் அதிகாரி அப்துல் ரஹ்மான் தலைமையில் சோதனை நடந்தது. அப்போது நான்கு பேர் ஒரே இடத்தில் நின்று வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது தெரியவந்தது. அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் சிவக்குமார், ராமசாமி, வில்லாபுரத்தை சேர்ந்த தமிழரசன், முத்துமாரி என தெரியவந்தது. அவர்களிடமிருந்து 74 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து தெற்கு தாலுகா கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். நால்வரும் அவனியாபுரம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.


திக்... திக்... வேட்பாளர்கள்:

என்னதான் தலைவர்கள், நடிகர்கள் பிரசாரம் செய்தாலும் பணப் பட்டுவாடா செய்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்பது கட்சிகளின் கணக்கு. ஆனால் பாரபட்சமின்றி அனைத்து கட்சிகளிடமும் ஓட்டுக்காக மக்கள் பணத்தை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் யாருக்கு ஓட்டு அளிப்பார்கள் என்பதை கட்சியினரால் கணிக்க முடியவில்லை. பணத்தை பெற்றுக்கொண்டு என் ஓட்டு உங்க கட்சிக்கு தான்' என்ற மக்களின் வாக்குறுதியை நம்ப முடியாமல் உள்ளனர். இதற்கு மே 23 ல் தான் விடை தெரியும் என திக்... திக்... மன நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர்கள் உள்ளனர்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
POORMAN - ERODE,இந்தியா
16-மே-201917:45:54 IST Report Abuse

POORMANEC will stop election if tr is not in favour of ruling allies

Rate this:
Varathappan Parthasarathy - Karur,இந்தியா
16-மே-201911:30:47 IST Report Abuse

Varathappan Parthasarathyஅதி மு க வெற்றி உறுதி ...

Rate this:
RajanRajan - kerala,இந்தியா
16-மே-201908:59:04 IST Report Abuse

RajanRajanகனம் கோர்ட்டார் அவர்களே இந்த ஓட்டுக்கு பணபட்டுவாடா கலையை சட்டம் பாதுகாக்கிறதா அல்லது சட்டத்தை இது பாதுகாக்கிறதா என்றோரு குழப்பம். கோர்ட் நெருப்புன்னு கர்ஜிக்கிறீர்கள் ஆனா இங்கே அந்த நெருப்புலே என்னமா தண்ணி ஊத்துறானுங்க கோலாகலமா. உங்களால என்ன சாமி பண்ண முடிஞ்சுது? இதுதான் தக்காளி சட்னின்னா என்ன ரத்தம்னா இன்னாது சாமியோவ்.?

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X