பொது செய்தி

இந்தியா

ஜூலையில் சந்திரயான் - 2 விண்கலம்

Added : மே 16, 2019
Advertisement

பெங்களூரு:நிலவில் ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 2 விண்கலம், திட்டமிட்டபடி, ஜூலையில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளதாக, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நிலவில் ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் விண்கலம், 2008ல் செலுத்தப்பட்டது. நிலவின் சுற்று வட்டப் பாதையில் பயணித்த அந்த விண்கலம், நிலவில் தண்ணீர் உள்ளது என்பதை உறுதி செய்தது; இது, நம் நாட்டின் விண்வெளி பயணத்தின் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நிலவுக்கு மற்றொரு விண்கலத்தை அனுப்ப, இஸ்ரோ திட்டமிட்டது. பல்வேறு தடைகளுக்குப் பின், சந்திரயான் - 2 விண்கலத்தை, ஜூலை, 9 - 16க்குள் செலுத்த திட்டமிடப் பட்டு உள்ளது.
இந்த விண்கலம், செப்., 6ல், நிலவில் தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது; இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருவதாக, இஸ்ரோ கூறிஉள்ளது.இஸ்ரோ வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சந்திரயான் - 2 விண்கலத்துடன், 13 'பேலோட்' எனப்படும் ஆய்வுக் கருவிகள் அனுப்பப்பட உள்ளன. அதில், எட்டு கருவிகள், நிலவின் சுற்று வட்டப் பாதையில் ஆய்வு செய்யும் பிரிவில் இருக்கும். 'லேண்டர்' எனப்படும், நிலவில் தரையிறங்கும் பிரிவில், மூன்று ஆய்வுக் கருவிகள் இருக்கும்.
இதைத் தவிர, 'ரோவர்' எனப்படும், நிலவில் சுற்றி ஆய்வு செய்யும் பிரிவில், இரண்டு ஆய்வுக் கருவிகள் இருக்கும். மேலும், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான, 'நாசா'வின் சார்பில், பரிசோதனை கருவியும், சந்திரயான் - 2 விண்கலத்துடன் அனுப்பப்பட உள்ளது. 'ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3' ராக்கெட் மூலம், இந்த விண்கலம் அனுப்பப்பட உள்ளது. நிலவில் இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத, அதன் தென் பகுதியில், நம் விண்கலம் தரையிறங்கி, ஆய்வு செய்ய உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X