பொது செய்தி

இந்தியா

வாராக் கடன் வசூல் இரு மடங்கு உயர்வு

Updated : மே 16, 2019 | Added : மே 16, 2019 | கருத்துகள் (22)
Advertisement

புதுடில்லி: கடந்த நிதியாண்டில், இதர சட்ட நடவடிக்கைகள் மூலம் வசூலிக்கப்பட்டதை விட, திவால் சட்டத்தின் கீழ், வாராக் கடன், இரு மடங்கு வசூலாகியுள்ளது.திவால் சட்ட நடவடிக்கைகளுக்கு அஞ்சி, பல தொழிலதிபர்கள், கடனை திரும்பச் செலுத்துவதும், கடன் மறுசீரமைப்பு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவதும் அதிகரித்துள்ளது. இதனால், வங்கிகளின் வாராக் கடன் வசூல் அதிகரித்துள்ளது. இது குறித்து, தர நிர்ணய நிறுவனமான, 'கிரிசில்' வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: கடந்த, 2018 -- 19ம் நிதியாண்டில், திவால் சட்டத்தின் கீழ், 70 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. இது, பிற சட்ட நடவடிக்கைகள் மூலம் வசூலானதை விட, இரு மடங்கு அதிகம்.

கடந்த நிதியாண்டில், கடன் மீட்பு தீர்ப்பாயம், 'சர்பாசி' சட்டம், இ.எஸ்.ஐ.ஏ., சட்டம், லோக் அதாலத் ஆகியவற்றின் மூலம் மேற்கொண்ட நடவடிக்கையில், 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, வாராக் கடன் வசூலாகியுள்ளது. இதே காலத்தில், திவால் சட்டம் மூலம், 94 வழக்குகளில் தீர்வு விகிதம், 43 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, பிற சட்ட நடைமுறைகளில், 26.5 சதவீதமாக உள்ளது. திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு முன், 4,452 வழக்குகளில், 2.02 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக, திவால் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.


குறைந்ததுஇதன் காரணமாக, வங்கி துறையில், புதிதாக வாராக் கடன் உருவாவது குறைந்துள்ளது. இந்த வகையில், கடந்த நிதியாண்டில், வங்கி துறையின் மொத்த வாராக் கடன், 10 சதவீதம் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2017 - -18ம் நிதியாண்டில், 11.5 சதவீதமாக இருந்தது. திவால் சட்டத்தின் கீழ், ஒரு நிறுவனத்தின் மீதான வாராக் கடனுக்கு, 270 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். ஆனால், இந்த, 'கெடு'வுக்குள் தீர்வு காண முடிவதில்லை. ஒரு வழக்கில் தீர்வு காண, சராசரியாக, 324 நாட்கள் ஆகின்றன.


இதர சட்டப் பிரிவுகளில், தீர்வு காண, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இதனுடன் ஒப்பிடும் போது, திவால் சட்டம், மிக விரைவாக கடனை வசூலிக்க உதவுகிறது. இந்தாண்டு, மார்ச் நிலவரப்படி, திவால் சட்டத்தின் கீழ், 1,143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில், 32 சதவீத வழக்குகள், 270 நாட்களைக் கடந்தும், இன்னும் நிலுவையில் உள்ளன.

சில பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடனுக்கு, 400 நாட்களுக்குப் பிறகும், தீர்வு எட்டப்படாத நிலை உள்ளது. தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம், அதிக அளவில் வழக்குகளை கையாள்கிறது. இந்த சுமையைக் குறைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னுரிமை வழக்குகள் தொடர்பாக, தெளிவான வரையறையை உருவாக்குவது அவசியம்.

தகவல் திரட்டுவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, இரண்டாம் நிலை சொத்து சந்தையை ஏற்படுத்தினால், திவால் சட்டத்தின் கீழ், வழக்குகள் விரைந்து பைசலாகும்; வாராக் கடன் வசூலும் அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
16-மே-201920:24:10 IST Report Abuse
RajanRajan A GOOD RECOVERY DRIVE ON BANKING SECTOR WHICH WAS MADE LEAST BY THE PAST RULERS. THIS IS MODI SARKAAR.
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
16-மே-201912:01:23 IST Report Abuse
Narayan கார்ப்பரேட் பாலிசிகல், அநியாய டெண்டர் முதல் வாராக்கடன்கள் வரை எல்லா விதமான கார்ப்பரேட் தகிடு தத்தங்கள் செய்வது என்னமோ பொருளாதார இடதுசாரி காங்கிரஸ்தான், அதை கடிவாள வலை போட்டு பிடிப்பது என்னமோ பொருளாதார வலதுசாரி பாஜக. ஆனால் இதன் மீதான மக்களின் கருத்து குறிப்பாக தமிழகத்தில் மட்டும் நேரெதிராக இருப்பது ஏன்?
Rate this:
Share this comment
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
16-மே-201910:00:30 IST Report Abuse
Apposthalan samlin என்னுடைய நண்பர் சேவை என்ஜினீயர் தொழில் செய்து வருகிறார் எல்லா நாடுகளுக்கும் அவர் போவார். நான் அவரிடம் கேட்டேன் எங்களுடைய இந்தியா வை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவர் சொன்ன பதிலால் அதிரிச்சி அடைந்தேன்.அவர் சீனாவுக்கும் போய் இருக்கிறார். இந்தியாவில் சுகாதாரம் கிடையாது வாட்டர் மாசு, ஒலி மாசு, மக்கள் தொகை பெருக்கம், ஏழைகள் அதிகம், வேலை இல்லாத்திண்டாட்டம், உணவு திண்டாட்டம் எல்லாம் இருக்கிறது ஆனால் சீனாவை பற்றி புகழ்ந்து பேசினார். உள்நாட்டு காரன் இல்லை ஒரு வெளி நாட்டு காரன் இந்தியாவை பற்றி பெருமையாக பேசினால் அது தான் டிஜிட்டல் இந்தியா.
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-மே-201915:35:53 IST Report Abuse
ஆரூர் ரங்உங்கள் ஆதர்ச நாயகர்கள் மொகலாயரும் பாவாடை வெள்ளையனும் சுரண்டிய பிறகும் இன்னும் நாடு உயிரோடு இருப்பதே சாதனைதான்...
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
16-மே-201915:59:03 IST Report Abuse
parthaஅவர் ஒன்று உம்மைப்போல மோடி வெறுப்பாளராக இருக்கவேண்டும் அல்லது நுனிப்புல் மேபவராக இருக்கவேண்டும், சமீபத்தில் நடந்த கோடிக்கணக்கானவர்கள் பங்கேற்ற கும்பமேளாவில் எல்லா இடங்களும் spic and span ஆக சுத்தமாக வைக்கப்பட்டிருந்ததை வெளி நட்டு மீடியாக்களும் பாராட்டி இருந்ததை நீங்கள் அறியாதது எப்படி என்று தெரியவில்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X