அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு
முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

சென்னை : 'மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றி கிடைக்க அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்' என நான்கு சட்டசபை தொகுதி வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

EPS,பழனிசாமி,இடைத்தேர்தல்,வாக்காளர்,முதல்வர், இ.பி.எஸ்., வேண்டுகோள்


அவரது அறிக்கை : தமிழக மக்களின் நலனுக்காகவே வாழ்ந்த ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள்

செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காக வாழ்ந்த ஜெயலலிதா வழியில் அரசு வெற்றி நடை போடுகிறது.

அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் தடையின்றி கிடைக்க 19ம் தேதி நடக்க உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வாக்காளர்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பன்னீர் 'மிஸ்சிங்':


அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக உள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் பழனிசாமி ஆகியோர் இணைந்து தொண்டர்களுக்கு

Advertisement

கடிதம் எழுதுவது வழக்கம். ஆனால் நேற்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து முதல்வர் தனியாக அறிக்கை வெளியிட்டார்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வரை தவிர்த்து விட்டார். ஏற்கனவே பன்னீர்செல்வம் ஓரம்கட்டப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் முதல்வர் தனியே அரசின் சாதனைகளை பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டிருப்பது கட்சியினரிடம் சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
16-மே-201908:48:41 IST Report Abuse

PANDA PANDIமக்களும் நிறைய வேண்டுகோள் விடுத்தும் ஒன்றும் கண்டுக்காம உங்க சுயநல வேலைகளை மட்டும் கவனித்து 2 ஆண்டுகள் கடத்திவிட்டார். இப்போ நீங்க வேண்டுகோள் விடுகிறீர். நாங்கள் செய்யவோமா.

Rate this:
sundar - chennai,இந்தியா
16-மே-201916:12:28 IST Report Abuse

sundarஅப்பு நீங்க நேபாள் யே இருங்க தமிழ் நாட்டுக்கு யார் வேணும்னு நாங்க பார்த்துகிறோம். ...

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-மே-201905:10:47 IST Report Abuse

Mani . V"எங்கள் உறவினர்கள் பயன் பெSம் வகையிலான திட்டங்கள், தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் திட்டங்கள் தடையின்றி கிடைக்க அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்".

Rate this:
sundar - chennai,இந்தியா
16-மே-201916:15:12 IST Report Abuse

sundarமணி@ நீங்க இருக்கும் நாட்டில் வளர்ச்சி எப்படி வந்தது என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அங்கும் இதே போல விவசாய நிலங்களில் தான் பல திட்டங்க நிறைவேறி உள்ளது. ...

Rate this:
blocked user - blocked,மயோட்
16-மே-201904:56:59 IST Report Abuse

blocked userவின்சியை பிரதமராக்கி அழகுபார்க்க நினைக்கும் சுடலையின் ஆட்சி வேண்டும் என்றால் திமுகவுக்கும், ஓரளவுக்கு காசடிக்காமல் ஆளும் அதிமுக வேண்டுமா என்று மக்கள் முடிவு செய்யவேண்டும். வாக்களிக்கும் முன் திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு தடையின்றி நடக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X